அருள்மிகு வேதநாராயணர் திருக்கோவில் (மன்னார்கோவில்)

God Name : மூலவர்: ஸ்ரீ வேத நாராயணர்் உற்சவர்: ராஜமன்னாரான ராஜகோபால ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

பிருகு முனிவருக்காக - பரமபத நாதராகவும், வேத நாராயணராகவும், அரங்கநாதராகவும் மூன்று நிலைகளில் சேவை சாதித்துள்ளார் பெருமாள். மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட ஸ்தலம். திருமழிசை ஆழ்வார் முக்தி பெற்ற ஸ்தலம். பிருகுவும் மார்க்கண்டேயரும் ஸ்தாபித்த ஸ்தலம். குலசேகர ஆழ்வார் அழகிய மன்னார் திருவடியை அடைந்த ஸ்தலம். அவர் மன்னார் கோவில் சென்று பெருமாளை வழிபட்டு நின்றபோது பேரொளி ஒன்று தோன்றியது. பெருமாளின் திருமொழியைப் பாடியவாறே அந்த ஒளியில் ஐக்கியமானார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வேத நாராயணர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வேதவல்லி, புவனவல்லி தாயார்கள் உடன் எழுந்தருளியுள்ளனர். இருந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் ஸ்ரீ வேத நாராயணரே சேவை சாதிக்கின்றார். சுதை சிற்பங்கள் ஆனதால் திருமஞ்சனம் கிடையாது. உட்சுவர்களில் பிரம்மா மற்றும் சிவபெருமான் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. பச்சிலை மூலிகை கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள். மார்க்கண்டேயரும் பிருகு முனிவரும் அருகே காணப்படுகின்றனர். மூலஸ்தானத்தைச் சுற்றி வர முதல் அடுக்கில் யானை முடுக்கும், இரண்டாம் அடுக்கில் பூனை முடுக்கும் பிரபலமானது. சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. ராஜமன்னாரான ராஜகோபால ஸ்வாமி உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். மிகவும் அழகான ஐம்பொன் சிலை. சம ஆசனம் கொண்டு கருடாழ்வார், ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் ஆகிய விக்ரஹங்கள் பேரெழிலுடன் சேவை சாதிக்கின்றனர். கோபுரத்தின் உட்புறம் உள்ள கருப்பர்சுவாமி இவ்வூருக்கே காவல் தெய்வமாக விளங்குகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.