அருள்மிகு ஸ்ரீ கைலாஸநாதர் திருக்கோவில் (பிரம்ம தேசம்)

God Name : ஸ்ரீ கைலாஸநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தவற்றை செய்தமைக்காக சாபத்தையும் பெற்று, பதவியையும் இழந்த பிரம்மன், விமோசனம் தேடி பூலோகம் வந்து, சிவ க்ஷேத்திரங்கள் பல சென்று வழிபட்டுக் கொண்டிருக்கையில், அவருடைய பேரனான உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்த இவ்விறைவனான ஸ்ரீ கைலாசநாதரை வழிபட்டு தன்னை மன்னித்தருளும்படி பிரார்த்தித்தார். பிரத்யட்சமான சிவபெருமான் பிரம்மனின் சாபத்தைப் போக்கி, அவர் இழந்த பதவியையும் மீண்டும் அவருக்கே தந்து அருளாசி வழங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ பதரிவனேஸ்வரர், ஸ்ரீ கைலாசநாதர் ஆகிய ஐந்து லிங்கமூர்த்தங்கள் எழுந்தருளியிருப்பதால் இதை பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்று அழைக்கின்றனர். வேதங்களை ஓதும் அந்தணர்களுக்கு இந்த கிராமத்தை தானமாக வழங்கி, இவ்வாலயத்தைக் கட்டித் தந்தான் ராஜ ராஜ சோழன் என குறிப்பொன்று கூறுகிறது. ஊருக்கு ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தான் ராஜ ராஜ சோழன். திருக்குற்றால ஸ்தல புராணப்படி, நவகயிலாயங்களில் முதன்மையானது பிரம்மதேசம் எனக் கூறப்பட்டுள்ளது. உத்ராயண - தட்சிணாயண காலங்களில் சூரியனின் பாதை மாறுபடும். ஆனால் இங்கு இரண்டு காலங்களிலும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்வதால் இதை சூரிய ஸ்தலம் என்று கூறுவார்கள். காஞ்சி காமகோடி மடத்து பீடாதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதியின் அவதார ஸ்தலம். தேவார வைப்புத்தலம் - பஞ்சலிங்க க்ஷேத்திரம்.
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ பிரஹந்நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். மிகப் பெரிய திருமேனியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். அம்பாள் பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி தனிக் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். குடைவரை வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் சித்தி விநாயகர் கம்பீரமாக எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். சமயக் குரவர்கள் மற்றும் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சூரிய - சந்திரர்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். நந்தியம்பெருமானும் மண்டபத்து மேல் தொங்கும் கற்சங்கிலிகளும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டவை. வடக்கு பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தாண்டவமூர்த்தி ஓம் எனும் பிரபையுடன் காணப்படுகிறார். புனுகு சபாபதி அழகான திருவுருவம். பதஞ்சலி-வியாக்ரபாதர் மற்றும் சிவகாமி உடன் உள்ளனர். வாலி - சுக்ரீவன் போரிடும் காட்சியும் ராமர் அதை பார்த்துக் கொண்டிருப்பதும் தத்ரூபமாக தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரத்தில் ஜ்வரஹரேஸ்வரர், சப்த மாதர்கள், பால கணபதி, ஆத்ம - வியாக்ய தட்சிணாமூர்த்தி, மஹிஷாசூரமர்த்தினி, பால முருகன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்ரீ விசாலாட்சி சஹித ஸ்ரீ காசி விஸ்வநாதர், உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார், ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ இலந்தைநாதர் ஆகிய மூர்த்தங்களை கண் குளிர தரிசிக்கலாம். இதனால் பஞ்சலிங்க க்ஷேத்திரம் எனக் கூறுவார்கள். சோமவாரத்து மண்டபத்தின் தென்கோடியில் ஆதி மூலலிங்கமாக பதரிவனேஸ்வரர் எனப்படும் இலந்தைநாதர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரதோஷ சபை மண்டபத்தில் நடுநாயகமாக பிரதோஷ மூர்த்தி தரிசனம் தருகின்றார். சிவபூத கணங்கள், அஷ்டதிக் பாலகர்கள் உட்பட சகல தேவதைகளும் தத்தம் வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். உற்சவ மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. சோமவார மண்டபத்து சிற்பங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. நாலாயிரத்தம்மன் கிராம தேவதை தரிசனம் தருகிறாள். ஏழடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட திருமேனியுடன் காணப்படும் பிக்ஷாடனர் (கங்காளநாதர்) பிரம்மிக்க வைக்கும் அழகுடன் காணப்படுகிறார். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் திருவுருவம். எந்தவித பிடிமானமும் இல்லாமல் பூத கணங்கள் சூழ காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் - இலந்தை (உத்திரகோசமங்கை போல் மரமாக உள்ளது). இதில் காய்க்கும் இலந்தைப் பழத்தை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.