அருள்மிகு சொரிமுத்தையன் திருக்கோவில் (பாபநாசம்)

God Name : மலர் சொரி முத்தையனார் எனப்படும் தர்ம சாஸ்தா

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

தேவர்கள் பொன்னாகப் பொழிந்ததால் ஸ்வர்ணாபிஷேக சாஸ்தா, பொன் சொறியும் முத்தையன் என்றெல்லாம் பெயர் கொண்டு நாளடைவில் சொரி முத்தையன் என மருவியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். சிறு முத்து அய்யன் என்ற பெயரே மருவியதாகக் கூறுவோரும் உண்டு. சாஸ்தாவின் மூலமே சொரிமுத்தையன்தான் என்று மஹா சாஸ்தா கானம் என்ற மலையாள கீர்த்தனையிலிருந்து தெரிய வருகிறது. ஒரு சமயம் யோக நித்திரையிலிருந்த அகஸ்தியர் தனது ஞான திருஷ்டியால், பிரகாசமான ஜோதியின் வடிவாகத் தோன்றிய சாஸ்தா தனது பரிவாரங்களுடன் பரமேஸ்வரனை வழிபடும் காட்சியைக் கண்டார். தான் கண்ட இந்தக் காட்சி எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தார். அகஸ்தியரின் வேண்டுகோளுக்கிணங்க சாஸ்தா தனது பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆடி அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் நீராடி இவரை வழிபடுபவர்களுக்கு எல்லா இன்னல்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ அருள் புரியுமாறு சாஸ்தாவிடம் அகஸ்தியர் வேண்டினார். பாறையின் மேல் மலையாள பாணியில் கட்டப்பட்ட கோவில். கோவிலையொட்டி சில்லென்று ஓடுகிறது தாமிரபரணி நதி. வனாந்திரத்தில் வனராஜாவாகக் குடிகொண்டு ஆட்சி செய்கின்றார் சாஸ்தா. முக்குலத்தோரும் வழிபடும் காவல் தெய்வம். கொடிய வனப்பகுதியாக இருந்தாலும், விஷ ஜந்துக்கள் யாரையும் தீண்டியதில்லை என்கின்றனர். பிரார்த்தனைக்காகக் கட்டும் வெண்கல மணிகளை விழுங்கும் அதிசய மரம் உள்ளது. (இலுப்பை மரம்) கட்டிய மணி, பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக இருப்பதைக் காணலாம். கீல் வாதம், பக்வாதம், பித்த வெடிப்பு, கால் ஆணி உபாதை உள்ளவர்கள், தங்களது பாத அணிகளை இங்கு ஒரு கயிற்றில் கட்டித் தொங்க விடுகின்றனர். இதனால் உபாதைகள் நீங்கி விடுவதாக நம்பிக்கை. அவைகள் தாமாகவே தேய்ந்துவிடும் அதிசயத்தையும் காணலாம். சிங்கம்பட்டி ஜமீன்தாரின் பராமரிப்பிலுள்ள ஆலயம். தங்கும் விடுதிகள் உள்ளன. உணவு வசதியுடன் செல்வது உகந்தது.
தாம்போதி பாலம் கடக்கும் முன் சிறு கருப்பர் சுவாமி சந்நிதி உள்ளது. இவரை முதலில் தரிசிப்பது சம்ப்ரதாயம். போகும் வழியில் தலை அணை, ஹைட்ரோ எலக்ட்ரிசிட்டி ஸ்டேஷன், கல்யாண தீர்த்தம், கோடி லிங்கேஸ்வரர் கோவில், கிருஷ்ணவேணி அம்மாள் ஆஸ்ரமம் ஆகியன பார்க்கலாம். மூலஸ்தானத்தில் மூலவராக மலர் சொரி முத்தையனார் என்ற பெயர் கொண்டு தர்ம சாஸ்தா வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இடது காலை குத்திட்டு, வலது காலை தொங்கவிட்டபடி சற்றே இடது புறமாக திரும்பியபடி தரிசனம் தருகின்றார். ஆதி பூதநாத ஸ்வரூபம். மூலாதார சக்கரம். பூரணை - புஷ்கலை தேவியர்கள் உடன் உள்ளனர். இங்கு நந்தி, யானை, குதிரை வாகனங்கள் காணப்படுகின்றன. மஹாலிங்க சுவாமி, சாஸ்தா, பூதத்தான் ஆகிய மூவரும் பிரதான தெய்வங்களாக வீற்றிருக்க விநாயகர், தட்சிணாமூர்த்தி, சங்கிலி பூதம், பாதாள பூதம், சுடலைமாடன், கரடி மாடன், காத்தவராயன், பட்டவராயன், பேச்சியம்மா, பிரம்மராட்சசி ஆகிய பரிவார தெய்வங்களும் இருக்கின்றனர். பைரவரையும் சப்த கன்னிகைகளையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சமான இலுப்பை மரத்தடியில் சங்கிலி பூதத்தார், பிரம்மராட்சசி, சுடலைமாடன், இருளப்பன், இருளம்மா, கரடி மாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்களைக் காணலாம். ஆறு சாஸ்தா கோவில்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.