அருள்மிகு ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோவில், சோளிங்கநல்லூர்

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

புராண வரலாறு: ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவள். நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்க அவதாரம் செய்தவள். அவள் ஆயிரம் முகங்கள், இரண்டாயிரம் கைகள், மூன்று கண்கள், பெருங்கழுத்து, கனத்த சரீரம், புலிநகக் கைகள் ஆகியன கொண்டவள். ஆங்கிரஸ், பிரத்யங்கிரஸ் எனும் இரண்டு மகரிஷிகள் இவளை உபாசன மூர்த்தியாக பூஜித்து இருபது அக்ஷரம் கொண்ட மந்திரத்தை ஜெபித்தனர். அவர்களது பெயரைக் கொண்டே இந்த தேவியை பிரத்யங்கிரா என்று அழைக்கின்றனர். இந்த தேவியை வழிபாடு செய்பவர்களுக்கு ஆபிசார தோஷம், ஏவல், பில்லி-சூன்யம், ம்ருத்யு-பயம், பிதுர் சாபம், மாத்ரு சாபம் ஆகியன நிவர்த்தி ஆகும்.
மூலஸ்தானத்தில் அன்னை ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி மூலவராக எழுந்தருளி அருள் புரிகின்றார். கம்பீரமாக அமர்ந்து தரிசனம் தருகின்றாள். சிம்ம முகமும், 18 திருக்கரங்களும் கொண்ட தோற்றத்தை உடையவள். அதர்வண பத்ரகாளி, மஹா வஜ்ரேஸ்வரி, அஹங்கார ஆகர்ஷிணி, நிகும்பலா ஆகிய பெயர்களும் உண்டு. தனிக் கருவறையில் அன்னை வாராஹியின் அருளாட்சி நடக்கின்றது. நீல சரஸ்வதி, அன்னபூரணி, மஹாலட்சுமி, காயத்ரி, இந்திராக்ஷி, சாமுண்டா, பத்ரகாளி ஆகிய தேவிகளை தரிசித்து ஆசிகளைப் பெறலாம். லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மர், கருட பகவான் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிக்கலாம். குரு தட்சிணாமூர்த்தி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், கால பைரவர், ஐஸ்வர்யேஸ்வரர், ஆகாச லிங்கேஸ்வரர், சரபேஸ்வரர், ரிஷி ஈஸ்வரர், வீரபத்ரர் ஆகிய சிவஸ்வரூப திருவுருவங்களை தரிசிக்கலாம். உச்சிஷ்ட கணபதி, சந்திராஷ்டம கணபதி, ஹேரம்ப கணபதி என மூன்று வித கணபதிகளுடன் பால முருகன், ஐயப்பன், சனீஸ்வரர், தன்வந்திரி, நாகராஜா, நாக கன்னிகைகள், மற்றும் கருப்பண்ணஸ்வாமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நாகராஜா, நாகராணி, சஞ்சனா, சஷங்கனா, மற்றும் 108 நாகப் பரிவாரத் தேவதைகளுடன் நாகராஜத் தர்பார் நடக்கின்றது. ஜாதக ரீதியாக ராஹு - கேது தோஷமுள்ளவர்கள், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்தி பெறும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. அபராஜிதாயைச்ச வித்மஹே சத்ரு நிசதின்யைச்ச தீமஹி தன்னோ ப்ரத்யங்கிரா ப்ரசோதயாத் ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே ப்ருஹத் கண்டாயை தீமஹி தன்னோ ப்ரத்யங்கிரா ப்ரசோதயாத் ஓம் க்ருஷ்ண வர்ணி, ப்ருஹத் ரூபி, ப்ரஹத் கண்டீ மஹத் பாயதேவி தேவி மஹா தேவி சத்ரூன் விநாசய மம சத்ரூன் விநாசாய நமஹ:
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.