அருள்மிகு பாபநாச ஸ்வாமி திருக்கோவில் (பாபநாசம்)

God Name : பாபநாச ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

அகஸ்தியரின் சீடரான உரோமச முனிவர் பிறவாமை வரம் வேண்டியும், சிவதரிசனம் கண்டு முக்தி அடைய வேண்டியும் தனது குருவான அகஸ்தியரின் உதவியை கோரினார். அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், அவருக்கு ஒன்பது மலர்களை கொடுத்தார் அகஸ்தியர். அதை தாமிரபரணி நதியில் மிதக்கவிட்டு, ஒவ்வொன்றும் எங்கு கரை ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பூஜிக்குமாறு பணித்தார். அந்த மலர்கள் கரை ஒதுங்கிய வெவ்வேறு இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடலானார் உரோமச முனிவர். அவையே நவ கயிலாயங்கள் எனப்படுகிறது. இதில் முதல் மலர் கரை ஒதுங்கிய இடம் பாபநாசம். இந்த நவ கயிலாயங்களில், நவகோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்தலத்தில் ஆட்சி புரிவதாக ஐதீகம். இத்தலத்தில் சூரிய பகவான் ஆட்சி புரிகிறார். நமச்சிவாய கவிராயரை அரசனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற, அம்பாள் உலகநாயகி தனது கையில் இருந்து பூச்செண்டை நமச்சிவாயர் கைக்கு மாற்றி அதிசயம் நிகழ்த்திய ஸ்தலம். பாவநாச தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நொடியில் தொலைந்து போகும். இது ஒரு ஸ்நான விசேஷ ஸ்தலம். ஆற்றோரமாக பல ஸ்நான கட்டங்கள் மண்டபங்களோடு உள்ளன. அகன்ற படிகள் கரை மேல் இருந்து நீர்மட்டம் வரை உள்ளன. 'பாவநாசத்தில் படி அழகு' என்பது ஒரு வழக்கு. தேவார வைப்புத்தலம் - நவ கயிலாயங்களில் ஒன்று (சூரிய ஸ்தலம்) - சக்தி பீடம்
மூலவர்: பாபநாச ஸ்வாமி, அம்பாள்: உலகநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் பாபநாச ஸ்வாமி. சுயம்பு லிங்க மூர்த்தம். ஒளி வீசும் அழகிய தேஜோமயத் திருமேனி. இவருக்கு ஸ்ரீ பாபவிநாசேஸ்வரர், ஸ்ரீ வயிராசர், ஸ்ரீ முக்காளர், ஸ்ரீ பரஞ்ஜோதி ஆகிய திருநாமங்களும் உண்டு. ஸ்வாமிக்கு எண்ணை சாதமும் அதற்கேற்ற துவையலும் நைவேத்யம் செய்வதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார். பாவங்களை செய்தவர்களின் பாவங்களை போக்குவதால் பாபவிநாசேஸ்வரர் என்றும், விராட புருஷன் வழிபட்டதால் வயிராசர் என்றும், ஜோதி வடிவாக இருப்பதால் பரஞ்ஜோதி என்றும் பெயர் கொண்டார். மூன்று வேதங்களும் களாமரமாக நின்று வழிபட்டதால் முக்காளர் என்ற திருநாமம் கொண்டார். வெளிச்சுற்றில் உள்ள களாமரத்தின் கீழ் களாலிங்கர் எழுந்தருளியுள்ளார். ரிக், யஜுர், சாம வேதங்கள் மூன்றும் களாமரமாகி இவ்விறைவனை வழிபடுகின்றன. மூன்று கிளைகளாக இந்த ஸ்தல விருட்சம் இருப்பதைக் காணலாம். அதர்வண வேதம் வாயுவாக ஸ்வாமியை வலம் வருவதாக ஐதீகம். உள்சுற்றில் எழுந்தருளியுள்ள கல்யாணசுந்தரர் ஒரே கல்லில் உருவான எழில் வடிவம். குண்டோதரன் குடை பிடிக்க, திருமணக்கோலத்தில் எழுந்தருளியுள்ள ரிஷபாரூடரை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய அதே கோலத்தில் தரிசனம் தருகின்றார். சித்திரை மாதப் பிறப்பன்று அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய நிகழ்வை நடத்திக் காட்டுகிறார்கள். அகஸ்தியரும் லோபமுத்ரையும் கல்யாணசுந்தரரை வணங்கி நிற்கின்றனர். உள்சுற்றில் ஸ்ரீ பூதல விநாயகர், புனுகு சபாபதி, தட்சிணாமூர்த்தி மற்றும் ஆறுமுக நாயனார் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அம்பாள் உலகநாயகி என்றழைக்கப்படும் லோகாம்பாள் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மிகுந்த வரப்பிரசாதி. சந்நிதி எதிரிலுள்ள உரலில் பெண்கள் மஞ்சளையிட்டு இடித்து தங்கள் நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள். மாங்கல்ய பலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள். சக்தி பீடங்களுள் இதை யோகபீடம் என்றும் விமலை பீடம் என்றும் கூறுவார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.