அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (அம்பாசமுத்திரம்)
God Name : அகஸ்திய மாமுனி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் அகஸ்திய மாமுனி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். வலது திருக்கரத்தில் ருத்ராட்ச ஜபமாலை கொண்டும், இடது திருக்கரத்தில் ஏடுகளுடனும் காட்சி தருகின்றார். மகா மண்டபத்தின் வடக்கில் தென் திசை நோக்கி லோபமுத்திரை எழுந்தருளியுள்ளார். இரண்டு சந்நிதிகளிலும் சோறு, கீரை, பலாக்காய் கறி நைவேத்தியம் செய்கின்றனர். புளியடி அகஸ்தியரின் உலாத் திருமேனி அழகாக இருக்கின்றது. விநாயகர், சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகியோரின் உலாத் திருமேனிகளை தரிசித்து மகிழலாம். வடக்கு வாசலுக்கு எதிரே உள்ள சந்நிதியில் அகஸ்தியரின் பெரிய திருவுருவம் வண்ண ஓவியமாக வரையப்பட்டுள்ளது. வள்ளி - தெய்வயானை உடனாய முருகப்பெருமானின் திருவுருவங்கள் அழகாக உள்ளன. நடராஜரின் உற்சவத் திருமேனி இரண்டு விரல்களை மடக்கி பக்தர்களை "வா" என்று அழைப்பது போன்ற அமைப்பில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.