அருள்மிகு ஆதி வராஹப் பெருமாள் திருக்கோவில் (கல்லிடைக்குறிச்சி)
God Name : ஸ்ரீ லட்சுமி வராஹர்் உற்சவர்: லட்சுமிபதி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
தல வரலாறு: ஆதியில் திருக்கரந்தை, கல்யாணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவ்வூர், குன்றுகளுக்கு இடையே அமைந்திருப்பதால் கல்லிடைக்குறிச்சி எனப் பெயர் கொண்டது. அதாவது 'கல்-இடை-குறிச்சி' என்ற பொருளில் உள்ளது. வடமொழியில் இதை 'சிலாசாலிபுரம்' என்பார்கள். விஷ்ணுதர்மன் என்ற அரசன் பல யாகங்களைச் செய்து வந்தான். பரமசிவம், குபேரன், தேவகணங்கள், அகஸ்தியர் ஆகியோரை வரவழைத்து வழிபட்டான். யாகத்திற்கு வந்த மகாவிஷ்ணுவை பூஜித்தான். தாமிரபரணி, மணிமுத்தாறு, வரட்டாறு ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமமே வராஹ தீர்த்தம் என்பர். இந்த முக்கூடலில் குடமுருட்டி வந்த சிலையே ஸ்ரீ வராஹர் ஆவார். பிரம்மா, ருத்ரன், இந்திராதி தேவர்கள், வசிஷ்டர் ஆகியோர் கூடியிருக்க, வேத முழக்கங்களுடன் இந்த வராஹரை இவ்வாலயத்தில் குபேரன் பிரதிஷ்டை செய்தான் என தல வரலாறு கூறுகிறது. தாமிரபரணியும் அதன் கிளையான கன்னடியன் கால்வாயும் அழகாகப் பாய்ந்தோட, நாற்புறமும் பசுமையான வயல்களும், மேற்கே கம்பீரமாக நிற்கும் பொதிகை மலையும், கல்யாண தீர்த்த அருவி, பாண தீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி என நீர்வளங்கள் மிகுந்தும் காணப்படுவதே கல்லிடைக்குறிச்சி கிராமம்.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ லட்சுமி வராஹர் கிழக்கே திருமுகமாக, ஆதிமூலமாக பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்டவாறும், இடது மடியில் பூமிதேவியை இருத்தியும், இடது கையால் அணைத்தபடியும், வலது கை தேவியின் முழங்காலைப் பற்றியவாறும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமான அழகுடன் திகழ்கிறது. சுவாமி சந்நிதி விமானத்தில் வர்ணகலப சயனப் பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது அருகே ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தேவியர் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியான லட்சுமிபதி, சங்கு-சக்ரதாரியாக பேரெழில் கொண்ட திருவுருவமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். குபேரனால் பூஜிக்கப்பட்ட அழகிய பஞ்சலோக விக்ரகம் இவர். நித்ய கல்யாணப் பெருமாள் என்றும், நித்ய உற்சவப் பெருமாள் என்றும் போற்றப்படுகிறார். தாமிரபரணி தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. மேளதாளங்களுடன் பட்டாச்சார்யார் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வந்து திருமஞ்சனம் செய்வார். வடமேற்கு பகுதியில் பூமிதேவிக்கு தனி சந்நிதி உள்ளது. வெளிவீதி பிரகாரத்தில் சாஸ்தாவையும், மண்டப வடக்கு மூலையில் மூல கருடனையும் வழிபடலாம். கொடிமர வாசல் வழியே உள்வீதிக்குச் சென்றால் மகாலட்சுமியை சேவிக்கலாம். கோட்டை வாசல் வழியே உள்ளே சென்றதும் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தாலான கண்டாமணியைக் காணலாம். அதைக் கடந்து சென்றால் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் காட்சி தருகின்றார். மூல கருடன் எதிரில் கரந்தையார்பாளையம் தர்ம சாஸ்தா சந்நிதி அமைந்துள்ளது. கோவில் மதிற்சுவர் அஸ்திவாரத்தில்தான் காவல் தெய்வமான பூதத்தான் உள்ளார். அர்ச்சனை, ஆராதனை, ஊர்வலம், ரதோற்சவம் அனைத்தும் உற்சவருக்கே செய்யப்படுகின்றன. முத்துஸ்வாமி தீட்சிதரின் 'ஸ்ரீ லட்சுமி வராஹம் பஜேஹம்' மற்றும் 'சங்கர பிரியகரம் குபேர பிரதிஷ்டிதம்' ஆகிய ஆபோகி ராகப் பாடல்களின் மூலம் தல பெருமையை அறியலாம். ஓம் தநுர்த்தராய வித்மஹே, வக்ர தம்ஷட்ராய தீமஹி, தந்நோ வராஹ ப்ரசோதயாத்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.