அருள்மிகு ஆதி வராஹப் பெருமாள் திருக்கோவில் (கல்லிடைக்குறிச்சி)
God Name : மூலவர்: ஸ்ரீ லட்சுமி வராஹர், உற்சவர்: லட்சுமிபதி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
ஆதியில் திருக்கரந்தை, கல்யாணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவ்வூர் குன்றுகளுக்கு இடையே அமைந்து இருப்பதால் கல்லிடைக்குறிச்சி எனப் பெயர் கொண்டது. அதாவது கல் - இடை - குறிச்சி என்ற பொருளில் உள்ளது. வடமொழியில் சிலாசாலிபுரம் என்பார்கள்.
விஷ்ணுதர்மன் என்ற அரசன் யாகங்கள் பல செய்து வந்தான். பரமசிவம், குபேரன், தேவகணங்கள், அகஸ்தியர் ஆகியோரை வரவழைத்து வழிபட்டான். யாகத்திற்கு வந்த மஹாவிஷ்ணுவை பூஜித்தான்.
தாமிரபரணி, மணிமுத்தாறு, வரட்டாறு ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமமே வராஹதீர்த்தம் என்பர். இந்த முக்கூடலில் குடமுருட்டி வந்த சிலையே ஸ்ரீ வராஹர். பிரம்மா, ருத்ரன், இந்திராதி தேவர்கள், வசிஷ்டர் ஆகியோர் கூடியிருக்க, வேத முழக்கங்களுடன் இந்த வராஹரை இவ்வாலயத்தில் குபேரன் பிரதிஷ்டை செய்தான் என ஸ்தல வரலாறு விவரிக்கின்றது.
தாமிரபரணியும் அதன் கிளையான கன்னடியன் கால்வாயும் அழகாக பாய்ந்தோட, நாற்புறமும் பசுமையான வயல்களும், மேற்கே கம்பீரமாக நிற்கும் பொதிகை மலையும், கல்யாண தீர்த்த அருவி, பாண தீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி என நீர்வளங்கள் மிகுந்தும் காணப்படுவதே கல்லிடைக்குறிச்சி கிராமம்.
முத்துஸ்வாமி தீட்சிதரின் 'ஸ்ரீ லட்சுமி வராஹம் பஜேஹம்', 'சங்கர பிரியகரம் குபேர பிரதிஷ்டிதம்' ஆகிய ஆபோஹி ராகப் பாடல்களின் மூலம் ஸ்தல பெருமையை அறியலாம்.
மூலவர்: ஸ்ரீ லட்சுமி வராஹர். உற்சவர்: லட்சுமிபதி, ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள், மஹாலட்சுமி.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ லட்சுமி வராஹர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, ஆதிமூலமாக பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்டவாறும், இடது மடியில் பூமி தேவியை இருத்தியும், இடக்கையால் அணைத்தபடியும், வலது கை தேவியின் முழங்காலைப் பற்றியவாறும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமான அழகுடன் இருக்கின்றது.
ஸ்வாமி சந்நிதி விமானத்தில் வர்ண கலப சயனப் பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது அருகே ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
உற்சவ மூர்த்தியான லட்சுமிபதி சங்கு - சக்ரதாரியாக பேரெழில் கொண்ட திருவுருவமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். குபேரனால் பூஜிக்கப்பட்ட அழகிய பஞ்சலோக விக்ரஹம். 'நித்ய கல்யாணப் பெருமாள்' என்றும் 'நித்ய உற்சவ பெருமாள்' என்றும் போற்றுவார்கள். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
தாமிரபரணி தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர். மேளதாளங்களுடன் பட்டாச்சார்யார் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து திருமஞ்சனம் செய்வார்.
வடமேற்கு பகுதியில் பூமி தேவிக்கு தனி சந்நிதி. வெளிவீதி பிரகாரத்தில் சாஸ்தாவையும், மண்டப வடக்கு மூலையில் மூல கருடனையும் வழிபடலாம். கொடார வாசல் வழியே உள்வீதிக்கு சென்றால் மஹாலட்சுமியை சேவிக்கலாம்.
கோட்டை வாசல் வழியே உள்ளே சென்றதும் 300 கிலோ எடையுள்ள வெங்கலத்தாலான காண்டாமணி காணலாம். அதைக் கடந்து சென்றால் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் காட்சி தருகின்றார். மூல கருடன் எதிரில் கரந்தையார்பாளையம் தர்ம சாஸ்தா சந்நிதி கொண்டுள்ளார்.
கோவில் மதிற்சுவர் அஸ்திவாரத்தில்தான் காவல் தெய்வமான பூதத்தான் இருக்கின்றார்.
அர்ச்சனை, ஆராதனை, ஊர்வலம், ரதோத்ஸவம் எல்லாம் உற்சவருக்குத்தான் செய்கின்றனர்.
ஓம் தநுர்த்தராய வித்மஹே.. வக்ர தம்ஷட்ராய தீமஹி .. தந்நோ வராஹ ப்ரசோதயாத்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.