அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோவில் (அத்தாளநல்லூர்)

God Name : மூலவர்: ஆதி மூலப் பெருமாள்் உற்சவர்: கஜேந்திர வரதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

இந்திரத்யும்னன் என்ற அரசன், அகஸ்தியரை அவமதித்ததால் அவரின் சாபம் பெற்று காட்டு யானையாக மாறி, கஜேந்திரன் என்ற பெயரில் திரிகூடமலை காட்டுப் பகுதியில் சாப விமோசனம் வேண்டி திரிந்து கொண்டிருந்தான். ஹுஹு என்ற கந்தர்வன், நதியில் ஸ்நானம் செய்ய வந்த கபில முனிவரின் காலைப் பிடித்து இழுத்து விளையாடி குறும்பு செய்ததால், கோபம் கொண்ட கபில முனிவர் அவனை முதலையாக மாறுமாறு சாபம் கொடுத்தார். திரிகூடமலை காட்டுப் பகுதியில் உள்ள தீர்த்தத்தில், சாப விமோசனத்திற்காகக் காத்திருந்தது முதலை. இந்த தீர்த்தத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களை தினமும் பறித்துக் கொண்டு போய், திருமாலுக்குப் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது கஜேந்திர யானை. ஒரு நாள் பூ பறித்துக் கொண்டிருந்த யானையின் பின்னங்காலை முதலை பிடித்துக் கொண்டது. "ஆதிமூலமே! இந்த முதலையின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றி, இந்த மலரைப் பூஜைக்கு ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசி வழங்குங்கள்" என அலறியது யானை. யானையின் துயரைத் துடைக்க கருட வாகனத்தில் பறந்து வந்த திருமால், சக்ராயுதத்தால் முதலையைக் கொன்றார். இதன் மூலம் முதலைக்கும் சாப விமோசனம் கிடைத்தது. கஜேந்திர யானைக்கும் வைகுந்த பதவி கிடைத்தது என ஸ்தல வரலாறு கூறுகிறது. கஜேந்திர மோட்சம் எனும் நிகழ்வு நடந்த இந்த தீர்த்தத்தைச் சக்கர தீர்த்தம் என்பார்கள். அத்தி - ஆள - நல்லூர் என்பதே அத்தாளநல்லூர் என மருவியது. அத்தாளம் என்றால் இரவு உணவு. பசியில் வரும் வழிப்போக்கர்களுக்கு இரவு உணவு வழங்கும் ஊர் என்பதால் இந்தப் பெயரைக் கொண்டதாகச் சிலர் கூறுவர். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பூலோக வைகுண்டம்.
மூலவர்: ஆதி மூலப் பெருமாள்் உற்சவர்: கஜேந்திர வரதர்் தாயார்: ஆண்டாள். மூலஸ்தானத்திற்குப் படிகளேறிச் செல்ல வேண்டும். இது ஒரு மாடக் கோவில். மூலஸ்தானத்தில் ஆதி மூலப் பெருமாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். "ஆனை காத்தருளிச் செய்த பிரான்" என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷி இருவரும் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். சுதை சிற்பங்கள் ஆனதால் தைலக்காப்பு மட்டுமே. உற்சவராக கஜேந்திர வரதர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். எட்டடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. உற்சவ மூர்த்திகளுக்கே தினமும் திருமஞ்சனம் செய்கின்றனர். மகாமண்டபத்தில் ஆண்டாள் சந்நிதி கொண்டுள்ளார். கீழே படி இறங்கி வந்தால் உள்ள சந்நிதியில் பரமபதநாதரை சேவிக்கலாம். வீற்றிருந்த கோலத்தில் கம்பீரமாகக் காணப்படுகின்றார். சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், சட்டைநாதர், தசாவதார மூர்த்திகள், ஆழ்வாராதிகள் ஆகிய மூர்த்திகள் தரிசனம் தருகின்றனர். ஸ்தம்பம் ஒன்றில் அழகிய நரசிம்மரை சேவிக்கலாம். மூலவரின் விமானத்தில் தெற்குபுறமாகக் காணப்படும் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. அரியும் சிவனும் ஒன்று என்பதை விளக்குவதாக உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.