அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோவில் (வீரவநல்லூர்)
God Name : மூலவர்: பூமிநாதர்் சிறப்பு மூர்த்தம்: சந்தன சபாபதி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
தேவேந்திரனின் மந்திரியான விசுமுகன் என்பவனுக்கு மந்திரன் என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த மந்திரன் இங்குள்ள சுயம்புலிங்கத்தை பூஜித்து வழிபட்டான். பிரத்யட்சமான இறைவனிடம் தனக்கு சாயுஜ்ய பதவி கேட்டுப் பெற்றான். மந்திரன் வழிபட்டதால் இறைவனுக்கு மந்திரலிங்கம் என்ற பெயர் வந்தது. இவனுக்கு அசுரர்களால் பலமுறை அபகரிக்கப்பட்ட வேதங்கள் நான்கும் இத்தலத்தில் புன்னை மர உருவில் இருந்து இங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு நிழல் அளித்து வந்தன. இதனால் இங்கு கோவில் கொண்ட இறைவன் புன்னைவனநாதர் எனப்பட்டார்.
நகுஷ மன்னன் என்பவனின் சிவிகையை அகஸ்தியர் சுமந்து கொண்டு செல்லும்போது முனிவரை காலால் உதைத்ததால் மலைப்பாம்பாக உரு மாறினான். அந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு தவமிருந்து சாப விமோசனம் பெற்றான்.
திருக்கடவூரில் இறைவனால் தண்டிக்கப்பட்ட யமன் இங்கு ஒரு கொடி வடிவில் கிடந்தான். இதனால் பூமியின் பாரம் அதிகரிக்கவே, பூமிமாதேவி இத்தலம் வந்து இறைவனை பூஜித்து தினமும் மலர்களால் அர்ச்சித்து சுரைக்கறியமுது நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தாள்.
இறைவன் யமனை உயிர்ப்பித்து பூமி தேவியின் பாரத்தை குறைத்தார். இந்த நிகழ்வினால் இவ்விறைவனை பூமிநாதர் என்கின்றனர்.
பூமிதேவி உண்டாக்கிய நேமி தீர்த்தம் இங்கு உள்ளது. யமன் இவ்விறைவனை வழிபட்டு தரும தீர்த்தம் உண்டாக்கினான். இதனால் இவ்விறைவனுக்கு தருமநாயகர் என்ற பெயர் உண்டாயிற்று.
சுகுணசீலன் எனும் அரசன் பூமிநாதர் அருளால் கிடைத்த புதல்வனுக்கு வீரகண்டன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். வீரகண்டன் ஆட்சி பொறுப்பேற்றதும் இவ்வாலயத்தைக் கட்டினான். அவன் வழியே வந்த வீரமாறன் கானகத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சாரை சாரையாக எறும்புகள் போவதைப் பார்த்து அவற்றை பின் தொடர்ந்து சென்றதில் இந்த கோவிலை கண்டுபிடித்து, இக்கோவிலை புதுப்பித்து விரிவுபடுத்தி ஸ்தாபித்தான் என ஸ்தல வரலாறு. இதனால் இவ்வூருக்கு வீரவநல்லூர் எனப் பெயர் வழங்கலாயிற்று.
மூலவர்: பூமிநாதர், சிறப்பு மூர்த்தம்: சந்தன சபாபதி, அம்பாள்: மரகதவல்லி.
சபாபதி மண்டபத்திலுள்ள சந்தன சபாபதியை தரிசனம் செய்துவிட்டு, பின்னர் நந்தி மண்டபத்திலுள்ள கம்பத்தடி விநாயகரிடம் ஆசி பெற்று அதிகார நந்தி, சூரியன் ஆகியோரை வழிபட்டு மூலஸ்தானம் செல்கின்றனர்.
சந்தன சபாபதி மண்டபம் சிங்க வடிவங்களைக் கொண்டுள்ளது. நடராஜப் பெருமானின் திருமேனி ஒரே கல்லால் உருவானது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ பூமிநாதர். சுயம்பு சிவலிங்க மூர்த்தம். அழகிய திருமேனியுடன் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தவவனேசர், ஆனந்தலிங்கர், அமுதலிங்கர், புன்னைவனேசர், மந்திரேஸ்வரர், வேதநாதர், ஞானலிங்கர், மரகதலிங்கர், வீரகண்டேசர், வீரமாறநாயகர், அகஸ்தியநாயகர், தர்மநாதர் என்ற பன்னிரு திருநாமங்களுடன் போற்றப்படுகிறார்.
அதிசௌந்தரமான திருமேனியுடன் அன்னை மரகதவல்லி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
பூமிநாதர் சந்நிதி முன்பு உள்ள மணி மண்டபத்தில் யாளிகள் தாங்குவது போன்ற கற்றூண்கள் உள்ளன.
சுதையாலான கைலாஸ பர்வதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
உள்சுற்று வலத்தில் அறுபத்திமூவர், சப்தமாதர்கள், கன்னிமூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், கைலாயபர்வத நாதர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், பைரவர், சந்திரன், சண்டேச மூர்த்தி ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.