அருள்மிகு ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோவில் (சேரன்மகாதேவி)

God Name : ஆதி நாராயணப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலம் என கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருந்தாலும், சேர மன்னர்கள் ஆண்டதால் சேரன்மகாதேவி எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஊருக்கு வடகோடியில் அமைந்துள்ள இக்கோவிலை ராமசாமி கோவில் என்றே ஊரார் அழைக்கின்றனர். மூன்று நிலைகள் கொண்ட அஷ்டாங்க விமானமும் இரண்டு பிரகாரங்களும் கொண்டுள்ளது. முதல் நிலை மூலஸ்தானத்தில் ஆதி நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேயர் இருவருக்கும் பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம். இரண்டாம் நிலை மூலஸ்தானத்தில் வீற்றிருந்த கோலத்திலும், மூன்றாம் நிலை மூலஸ்தானத்தில் பள்ளி கொண்ட கோலத்திலும் சேவை சாதிக்கின்றார். மகா மண்டபத்திலிருந்து தொடங்கும் படிக்கட்டுகள் வழியே மேலே ஏறிச் சென்று பெருமாளை சேவிக்கலாம். பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கிருஷ்ண பகவான், ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர் மற்றும் 12 ஆழ்வார்களையும், மணவாள மாமுனியையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.