அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில் (கரிசூழ்ந்த மங்கலம்)

God Name : மூலவர்: சக்கரத்தாழ்வார்் உற்சவர்: வெங்கடாஜலபதி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலவர்: சக்கரத்தாழ்வார்் உற்சவர்: வெங்கடாஜலபதி. மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் பதினாறு திருக்கரங்களுடன் மஹா சுதர்ஸன மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். பின்புறமாக சக்கரம் ஏந்திய யோக நரசிம்மர் காணப்படுகிறார். ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட மூலவர். மூலவருக்கு மாதத்தில் 10 நாட்கள் எண்ணெய் சாத்தி திருமஞ்சனம் செய்கின்றனர். திருமஞ்சனம் முடித்து சில மணி நேரங்களில் திருமேனியில் எண்ணெய் பசை இராது. மூலஸ்தானத்திலேயே பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி வழியாக யோகநரசிம்மரை சேவிக்கலாம். சுற்றி வந்து பார்க்க இயலாது. பிரதோஷ வேளைகளில் நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் செய்கின்றனர். உற்சவராக வெங்கடாஜலபதி சேவை சாதிக்கின்றார். அலர்மேல்மங்கா தாயார் உடன் உள்ளார். மேல்சட்டை இல்லாமல்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். ரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட மூலவர். அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் ரோமச மகரிஷி தீர்த்தக் கட்டம் இருக்கின்றது. இங்குதான் கஜேந்திர மோட்ச நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகிறது. சில கல்வெட்டுகளில் இவ்ஊரை தென் திருவேங்கடம் எனக் குறிப்பிட்டுள்ளனர். புரட்டாசி 3வது சனிக்கிழமை கருடசேவை நடத்துகின்றனர். குலதெய்வமாக கொண்டவர்கள் தமது வீட்டில் சுபகாரியங்கள் செய்வதற்கு முன்பாக இங்கு வந்து சுப ஆரம்பமாக கருடசேவை செய்விக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.