வானமாமலை மடாலயம் (நாங்குநேரி)

God Name : மடாலயம்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

600 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட இந்த மடம் தென்கலை வைணவப் பிரிவின் ஆச்சார்ய பீடம். உலகளாவிய சீடர்களைக் கொண்டது. வடநாட்டில் ஸ்ரீ தோதாத்ரி மடம் பிரசித்தி பெற்றது. இவ்வூரைச் சேர்ந்த ஸ்ரீ ரங்கராஜ ஸ்வாமிகள் ஆச்சார அனுஷ்டானங்களில் உயர்ந்தவர். இவருக்குப் பிறந்த குழந்தை அழகிய வரதன் எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தது. அழகிய வரதனை வேத வேதாந்தங்கள் அனைத்தையும் நன்கு கற்றறியச் செய்தார். அழகிய வரதனின் தேஜஸைக் கண்டு அவனை அவதார புருஷரான மணவாள மாமுனியின் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருளினார். சகல சாஸ்திரங்களையும் அவரிடம் கற்றுணர்ந்த அழகிய வரதனுக்கு சன்யாச ஆஸ்ரமம் அளித்து ஆசிர்வதித்தார் மணவாள மாமுனிகள். இவரே இந்த மடத்தை நிறுவிய முதல் ஆச்சார்யார். தற்போது 30வது பட்டமான பரமஹம்ஸ ஸ்ரீ கலியன் வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் சேவை செய்து வருகிறார். கோயில்களின் நிர்வாகம் ஜீயரிடம் உள்ளது. சிஷ்யகோடிகள் மடத்திற்கு உதவி செய்கிறார்கள். கி.பி 1447ம் ஆண்டு முதல் நம்பூதிரிகளிடமிருந்து ஆலய நிர்வாகத்தை ஒரு வைஷ்ணவ சந்யாசி பெற்றுக் கொண்டாரென செப்பேடுகள் கூறுகின்றன. அந்த நாள் முதல் ஆலயம் மற்றும் மடம் இரண்டையும் அவரே கவனித்து வந்தார். ஒவ்வொருவரும் தமக்கு அடுத்து, மடத்தை நிர்வகிப்பது யார் எனத் தீர்மானித்து தேர்ந்தெடுப்பார்கள். தங்களது போர்வை மற்றும் திரிதண்டம் ஆகியவற்றை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து அவர்களை ஜீயர்களாகத் தேர்ந்தெடுப்பார்கள். ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தன்று ஸ்ரீ வானமாமலை ஜீயர், மணவாள மாமுனியின் மோதிரத்தை அணிந்து கொண்டு ஸ்ரீபாத தீர்த்தம் வழங்குவார். சமஸ்கிருத பாடசாலை ஒன்றும் நடத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.