அருள்மிகு வானமாமலைப் பெருமாள் திருக்கோவில் (நாங்குநேரி)
God Name : மூலவர்: ஸ்ரீ வானமாமலைப் பெருமாள், உற்சவர்: தெய்வநாயகப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
விருட்சங்களும் மலைகளும் சூழப்பட்ட பிரதேசம் என்பதாலும், மாமலைப் போல வானளாவி நிற்கும் கோபுரத்தைக் கொண்டுள்ளதாலும் வானமாமலை என்று அழைக்கின்றனர். சர்வவியாபகனாகிய எம்பெருமான் ஞானமலை உச்சியில் இருப்பவர் என்ற பொருளில் 'வானமாமலையே' என்று ஆழ்வார் வர்ணித்துள்ளார்.
ஆதிசேஷன் தவம் மேற்கொண்டு வழிபட்ட ஸ்தலம் என்பதால் நாகணைசேரி எனப் பெயருற்றது. இங்கு உள்ள புஷ்கரிணி நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டதால் 'நான்கு ஏரி' எனப் பெயருற்றது. பின்நாளில் மருவி 'நாங்குநேரி' என்றானதாம். ஏரிக்கரைக்கு பின்னால் ஆலயம் உள்ளது. மற்ற மூன்று புறங்களிலும் வீடுகள் சூழ்ந்துள்ளன.
வரமங்கை என்ற பெயரில் இத்தலத்தில் வளர்ந்து வந்த மஹாலட்சுமி, பின்னர் தோத்தாத்ரிநாதனை மணந்து கொண்டதால் 'ஸ்ரீவரமங்கலநகர்' எனப் பெயர் கொண்டது.
கார்ய மஹாராஜா புத்ர பாக்யம் வேண்டி திருக்குறுங்குடி பெருமாளை பிரார்த்தித்தார். பெருமாள் கூறியபடி நாங்குநேரி வந்து இங்கு புதையுண்டிருந்த பெருமாளை வழிபடுவதற்காக வெளிக்கொணர வேண்டி பூமியை அகழ்ந்தார். தோண்டும் கருவி பட்டதில் ரத்தம் பெருக்கெடுத்தது. இதை நிறுத்த தைலாபிஷேகம் செய்து அந்த எண்ணெயை அருகிலிருந்த கிணற்றில் ஊற்றி விட்டாராம். எண்ணெய் திருமஞ்சனப் பழக்கம் அதிலிருந்து தொடர்வதாக குறிப்பொன்று கூறுகிறது. நன்றிக் கடனாக கார்யமஹாராஜா கட்டிய கோவில் இது என்பர்.
மது - கைடப அசுரர்களின் சம்ஹாரம் நிகழ்ந்தபோது அவர்களது ரத்தம் பூமியில் சிந்தியதால் ஏற்பட்ட துர்நாற்றத்தைப் போக்கிக் கொள்ளவும், தான் தூய்மையடையவும் பூமாதேவி இங்கு தவமிருந்தாள்.
சிந்து தேச அரசன் ஒருவன் அருகேயுள்ள குஸாஸன ரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்தான். ரிஷி இல்லாத சமயம் அவரது ஆஸ்ரமத்தில் வைத்திருந்த உணவையெல்லாம் சாப்பிட்டுவிட்டான். இதனால் கோபம் கொண்ட ரிஷி அவனை நாயாக போகுமாறு சபித்தார். இத்தலத்திலுள்ள சேத்துதாமரை புஷ்கரிணியில் நீராடி தனது சுய உருவத்தைப் பெற்றான்.
ஆதிசேஷனுக்கே முக்கியத்துவம் தருவதாகவும் தனக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கருடாழ்வார் பிரார்த்தித்துக் கொண்டதற்கிணங்க, வைகுண்டத்திலே தனக்கெதிரே நின்று கொண்டு தான் புறப்படும் போது தனக்கு வாகனமாக இருக்கும்படி அருள் புரிந்தார்.
மூலவர்: ஸ்ரீ வானமாமலைப் பெருமாள், உற்சவர்: தெய்வநாயகப் பெருமாள், தாயார்: ஸ்ரீவரமங்கை நாச்சியார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் கிழக்கே திருமுகம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தோதாத்ரி பெருமாள் என்றொரு திருநாமமும் உண்டு. ஆதிசேஷன் குடை பிடிக்க, ஊர்வசி மற்றும் திலோத்தமை சாமரம் வீச, பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகின்றார். பிரம்மாவிற்கும், தேவேந்திரனுக்கும் பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம்.
ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி நாச்சியார்களும், ஸ்ரீவரமங்கைத் தாயாரும் உடன் உள்ளனர். மூலவரின் அருகே சூரிய - சந்திரர்கள், ப்ருகு மற்றும் மார்க்கண்டேயர் காணப்படுகின்றனர்.
வெளியே விஷ்வக்சேனர், வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார், மணவாள மாமுனிகள், உடையவர், கூரத்தாழ்வார், பிள்ளை லோகச்சார்யார், உபய நாச்சியார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
இந்திர புஷ்கரிணி பிரகாரங்களில் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ராமர், வேணுகோபாலன், லட்சுமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
மூலவருக்கு தினமும் எண்ணெய் ஸ்நானம் செய்வார்கள். நல்லெண்ணெயையும் சந்தன எண்ணெயையும் கலந்து திருமஞ்சனம் செய்வார்கள். திருமஞ்சனம் முடிந்ததும் அந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி விடுவார்கள். திறந்த கிணற்றில் ஊற்றப்பட்ட எண்ணெய், வெயில் - மழை - காற்றுக்கு இலக்காகி மருந்தின் குணத்தை அடைந்து விடுகிறது. இந்த எண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை. சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய அருமருந்தாக பயன்படுவதால் சேவார்த்திகள் எடுத்து செல்கின்றனர். இந்த கிணற்றை பூச்சிகள் அண்டுவதில்லை. இந்த எண்ணெய் மருந்தின் அருமை பெருமைகளை அகஸ்திய மாமுனி தெளிவாக விளக்கியுள்ளார்.
ஸ்ரீ சடகோபத்தில் ஆழ்வாரின் திருவுருவம் இருக்கின்றது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - அஷ்ட ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.