அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோவில் (உவரி)

God Name : சுயம்புலிங்க ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

அமைதியான சூழலுடன் கூடிய அழகான கடற்கரையில் இருக்கும் ஆலயம். கடற்கரையை ஒட்டி உள்ள அபிஷேக மண்டபம் கருங்கல்லால் ஆனது. உவர் நிறைந்திருப்பதனால் இந்த கடலை உவரி என்பர். அதே பெயர் ஊருக்கும் ஏற்பட்டது. சிற்பிகளால் உருவாக்கப்படாமல் தானாகவே தோன்றிய லிங்கங்களை சுயம்பு லிங்கம் என்பார்கள். இப்படி தானாகவே தோன்றிய லிங்கங்களில் இறைவனின் சாந்நித்யம் இருக்கும். உவரியில் யாதவ குலத்தைச் சேர்ந்த குடும்பங்களும் வாழ்ந்து வந்தன. முந்நாளில் இவ்வூரை கீழவூர் - மேலவூர் என இரண்டு பகுதிகளாக பிரித்திருந்தனர். இரண்டிற்கும் இடையே ஒற்றையடிப் பாதை ஒன்று இருந்தது. வழி நெடுக கடம்பைக் கொடிகள் அடர்ந்து வளர்ந்திருக்கும். பால்-தயிர் ஆகியவற்றை சுமந்து கொண்டு இந்த ஒற்றையடிப் பாதை வழியே சென்ற ஆய்ச்சியர் பெண் ஒருத்தி, கடம்பக்கொடி காலில் இடறியதால் தடுக்கி கீழே விழுந்தாள். அவள் சுமந்து சென்ற பானை நொறுங்கியதால் பாலும் தயிரும் வீணானது. இது போன்ற நிகழ்வுகள் இதே இடத்தில் பல முறை தொடர்ந்து நடைபெற்றதால் நஷ்டமுற்ற யாதவர்கள் ஒன்று கூடி கடம்பக் கொடிகளை வெட்டினார்கள். வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அச்சம் கொண்ட மக்கள், கொடியின் அடிப்பகுதியை தோண்டலாயினர். தோண்ட முடியவில்லை. அப்போது ஒருவன் சாமியாடிக் கொண்டே வெட்டுப்பட்ட பகுதிக்கு சந்தனம் பூசுமாறு கட்டளையிட்டான். பின்னர் சந்தனம் பூசப்பட்டதும் வெளிப்பட்ட சுயம்புலிங்கத்தின் மேல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்டது. இன்றளவும் வெட்டுப்பட்ட தழும்பு உள்ள இடத்தில் சந்தனம் பூசுகின்றனர். மறு நாள் களையும்போது அந்த சந்தனம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, மருந்தாகப் பயன்படுகிறது. இத்தலத்திலுள்ள கடலை சிவதீர்த்தம் என்பர். இரண்டாவது தீர்த்தம் ஆலயத்திலுள்ள கிணறு. இதை சக்தி தீர்த்தம் என்பர். இங்குள்ள தெப்பக்குளமே மூன்றாவது தீர்த்தமாகும். நேர்த்திக் கடன் நிறைவேற கடற்கரை மணலை 11 அல்லது 41 கூடை சுமந்து கொண்டு வந்து போடுகிறார்கள்.
மூலவர் சுயம்புலிங்க ஸ்வாமி, அம்பாள்: பிரம்மசக்தி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுயம்புலிங்க ஸ்வாமி. ஐந்து தலை நாகம் அழகாக குடை பிடிக்க, சர்வாலங்காரங்களுடன் இருக்கும் ஸ்வாமியின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். வெட்டுப்பட்ட தழும்பு ஒன்று திருமேனியில் காணப்படுகிறது. அந்த இடத்தை சந்தனத்தால் மூடுகின்றனர். மார்கழி மாதம் முப்பது நாட்களும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அம்பாள் பிரம்மசக்தி அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். விநாயகர், சுப்ரமண்யர் உற்சவத் திருமேனிகளாக உள்ளனர். இசக்கியம்மன், பேச்சியம்மன், மாடசாமி, கணபதி மற்றும் சாஸ்தா ஆகியோரின் சந்நிதிகள் பிற்கால சேர்க்கை என்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.