அருள்மிகு அழகியநம்பி திருக்கோவில் (திருக்குறுங்குடி)
God Name : நின்ற நம்பி எனப்படும் அழகிய நம்பி, இருந்த நம்பி மற்றும் கிடந்த நம்பி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
திருமால் குறுகிய வடிவில் வாமனனாக தோன்றிய ஸ்தலம் என்பதால் திருக்குறுங்குடி எனப் பெயருற்றது. அவர் திரிவிக்ரமனாக ஆகாயத்தை அளக்கும்போது அவரது திருவடி சதங்கையிலிருந்து உருவானதே இங்குள்ள சிலம்பாறு என்பர்.
நம்மாழ்வாரின் தாய் தந்தையர் புத்ரபாக்யம் வேண்டி திருக்குறுங்குடி நம்பியை பிரார்த்தித்தனர். தாமே பிள்ளையாக பிறப்பதாக கூறிய அசரீரிப்படி நம்பியே நம்மாழ்வராக பிறந்தார் என்பது ஐதீகம்.
நம்பாடுவான் என்ற பக்தன் மலையடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். தினமும் அழகிய நம்பியை சேவித்து விட்டு மலை மீது சென்று மலை மேல் நம்பியை சேவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கைசிக பண்ணை இசைத்தவாறு மலை மீது செல்வது வழக்கம்.
ஒரு நாள் கைசிக பண்ணை இசைத்துக் கொண்டு மலை ஏறும்போது, திடீரென அவர் முன்பு தோன்றிய வேதாளம் உன்னை விழுங்கப் போகிறேன் என்றது. பெருமாளை சேவித்துவிட்டு திரும்ப வரும்போது உனக்கு உணவாகிறேன், இது சத்தியம் என்றார் நம்பாடுவான். வேதாளமும் வழி விட்டது.
மூலஸ்தானத்தில் நின்று கொண்டு கைகூப்பி எம்பெருமானை வணங்கும்போது கொடிமரம் குறுக்கே மறைத்து நின்றதால் தரிசனம் செய்ய முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப சென்று வேதாளத்திற்கு உணவாக வேண்டும். பெருமாளை சேவிக்க முடியவில்லையே என வருந்தினார் நம்பாடுவான். கொடிமரம் இடம் பெயர்ந்து விலகி நின்றது. ஆசை தீர பெருமாளை சேவித்தார் பக்தர்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேதாளத்திடம் சென்ற நம்பாடுவான் தம்மை விழுங்குமாறு வேண்டினார். எம்பெருமான் கடாட்சத்தால் பசி அடங்கிப் போயிருந்த வேதாளம் தனக்கு பசி இல்லை எனக் கூறி அவரை விழுங்க மறுத்தது. அதற்கு நம்பாடுவான் தனது புண்யத்தை தாரை வார்த்து கொடுத்தான். வேதாளம் தனது கோர வடிவம் நீங்கி, தேவ வடிவம் பெற்றது. இந்த ஐதீகத்தை கைசிக ஏகாதசியன்று நடத்திக் காட்டுகின்றனர்.
திருமங்கை ஆழ்வார் தமது அந்திமக் காலத்தை இங்கே கழித்ததாக குருபரம்பரை வரலாறு கூறுகிறது.
வைஷ்ணவ வாமன க்ஷேத்ரம் மற்றும் தட்சிண பத்ரி என்றெல்லாம் போற்றப்படும் திருக்குறுங்குடி ஸ்தலம் மஹேந்திர மலை அடிவாரத்தில் நம்பி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தொலைவிலிருந்து பார்த்தால் மலை முக்கோண வடிவில் காட்சி அளிக்கும்.
மூலஸ்தானத்தின் நின்ற நம்பி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு திருக்குறுங்குடி நம்பி, அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, சுந்தரபரிபூரணர் ஆகிய திருநாமங்களும் உண்டு. இருந்த நம்பி வீற்றிருந்த கோலத்திலும், கிடந்த நம்பி சயன கோலத்திலும் சேவை சாதிக்கின்றனர். இருந்த நம்பி சந்நிதி பெருமாளை வைகுந்தநாதன் என்பர்.
நின்ற நம்பி - கிடந்த நம்பி சந்நிதிகளுக்கிடையே சிவபெருமான் சந்நிதி கொண்டுள்ளார். பைரவர் சந்நிதி ஒன்றும் உள்ளது. (இப்போது இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்)
தாயார் குறுங்குடிவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார். தனிக்கோவில் நாச்சியார்களின் உற்சவர்கள் பெருமாளுடன் ஏகாஸனத்தில் இருப்பதால் தாயார் சந்நிதியில் அர்ச்சனை கிடையாது.
அழகே வடிவாக இருப்பதால் அழகிய நம்பி என்றும், பஞ்ச சமஸ்காரங்களை பெற்றுள்ளதால் வைஷ்ணவ நம்பி என்றும் மூலவரை போற்றுகின்றனர்.
இங்கிருந்து அரை கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஆற்றின் கரையில் வாமன நம்பி சந்நிதி கொண்டுள்ளார். இவரை திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கின்றனர்.
ஆற்றின் சற்று தொலைவில் உள்ள ஒரு பாறை மீதமர்ந்து, தினமும் தமது வஸ்திரத்தை துவைத்து காயப் போடுவது உடையவரின் வழக்கம். இந்தப் பாறையை திருப்பரிவட்டப்பாறை என்பர். இதனருகே உடையவரின் சந்நிதியும் இருக்கின்றது. வடுக நம்பி என்ற பெயரில் எம்பெருமானே சிஷ்யனாக அருகில் இருந்தார். சிஷ்யன் வடுகநாதனுக்கு உடையவர் திருமண் காப்பிட்டு கூடவே கோவிலுக்கு அழைத்து சென்றார். கொடி மரம் வரை வந்த சிஷ்யன் திடீரென மறைந்து விட்டான். மூலஸ்தானத்திலிருந்த பெருமாளின் நெற்றியில் உடையவர் இட்ட திருமண் நாமம் இருந்தது என்பர்.
மலை உச்சி:
மலை உச்சியில் உள்ள மலை மேல் நம்பி என்கிற ஸ்ரீநிவாசனை சேவித்த பின்னரே திருக்குறுங்குடி க்ஷேத்ர பயணம் முழுமையடையும் எனக் கூறப்படுகிறது.
நம்பி சந்நிதி பிரகாரத்திலுள்ள பொய்கைக்கு கரண்டமாடு பொய்கை எனப் பெயர். இதன் கரையில் பனைமரம் ஒன்று உள்ளது.
மஹேந்திரமலை எனப்படும் இம்மலை அடர்ந்த காடுகளைக் கொண்டது. வனவிலங்குகள் நடமாடக்கூடும். எனவே நடந்து செல்லும் சேவார்த்திகள் கூட்டமாகச் செல்வதே சரியானது. அடிவாரத்தில் கிடைக்கும் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பயணிக்கலாம். (கட்டணம் ரூ 800/-)
108 திவ்ய தேசங்களுள் ஒன்று
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.