அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர் திருக்கோவில் (ராதாபுரம்)
God Name : வரகுணபாண்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலவர்: வரகுணபாண்டீஸ்வரர், அம்பாள்: நித்ய கல்யாணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வரகுணபாண்டீஸ்வரர். நித்ய கல்யாணி அம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
உட்பிரகாரத்தில் விநாயகர், முருகப் பெருமான், கங்காளநாதர், பைரவர், அறுபத்திமூவர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். சிவகாமி உடனாய நடராஜப் பெருமான் தனி சந்நிதி கொண்டுள்ளார். முன் மண்டபத்தில் காணப்படும் சஞ்சீவராயர் சிலை அழகாக இருக்கின்றது.
மதுரை மீனாட்சியை ஒத்த வடிவில் இருக்கும் நித்ய கல்யாணி அம்பாளிடம் பெண்கள் தங்களது மாங்கல்யம் காத்திட வேண்டி மஞ்சளை காணிக்கையாகத் தந்து மலை போல் குவித்துள்ளனர். பல ஆண்டுகள் கடந்தும் அவை கெடாமல் இருக்கின்றன.
கோவிலின் முன்பாக அழகிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது. அதில் நீராழி மண்டபமும் இருக்கின்றது.
வரகுண பாண்டியன் கட்டுவித்த கோவில் என்பதால் இறைவனுக்கு வரகுண பாண்டீஸ்வரர் என்ற பெயர் வந்தது என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.