அருள்மிகு ராமலிங்க ஸ்வாமி திருக்கோவில் (பனகுடி)
God Name : ராமலிங்கஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
ஆதியில் நம்பி சிங்கப் பெருமாள் கோவில் என அழைக்கப்பட்டதாம். 14 ஆம் நூற்றாண்டில் உத்தம பாண்டியனால் கட்டப்பட்ட கோவில் என்று கூறப்படுகிறது.
மூலவர்: ராமலிங்க ஸ்வாமி, அம்பாள்: சிவகாமி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ராமலிங்க ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். அன்னை சிவகாமி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீதேவி - பூதேவி சஹிதமாக நம்பி சிங்கப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
ஸ்ரீ ராமபிரான் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்தது போல் இந்த இடத்திலும் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் ராமலிங்க ஸ்வாமி எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது. வடநாட்டைச் சேர்ந்த யாத்ரிகர்கள் சோட்டா நாராயணன் கோவில் என்று குறிப்பிடுகின்றனர். கன்னியாகுமரி யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இவ்வழியே செல்கின்றனர்.
மஹேந்திரகிரி மலையின் அடிவாரமும், ஹனுமன் ஆறும், பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளும், அருகேயுள்ள கன்னிமாரன் தோப்பு எனும் சுற்றுலா மையமும், சிறிய அணைக்கட்டும் இந்த கிராமத்தின் அழகைக் கூட்டுகின்றன. பனகுடி மலையில் அனுமன் நதி உற்பத்தியாகிறது.
5 கி.மீ. தூரத்திலுள்ள குதிரபாஞ்சான் நீர்வீழ்ச்சி மேலும் அழகு சேர்க்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.