அருள்மிகு வள்ளியூர் குமரன் திருக்கோவில் (வள்ளியூர்)

God Name : குமரக் கடவுள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

முருகப் பெருமானின் வேலாயுதம் பட்டதால் மூன்று துண்டுகளாக சிதறிய கிரௌஞ்ச அசுரனின் மலை வடிவத்தின் தலை பாகமே வள்ளியூர் குன்றம் எனும் மலை. மகேந்திரகிரியின் கிழக்கே உள்ளது. முருகப் பெருமான் கிழக்கு முகமாய் நின்று, அகஸ்தியருக்கு நான்கு வேதங்களை உபதேசம் செய்த ஸ்தலம். பிரம்ம ஞான உபதேசத்தை நாரத முனிவர்க்கு முருகப் பெருமான் வழங்கிய ஸ்தலம் என்பர். நம்பிராஜன் மகளான வள்ளியை குமரன் மணம் புரிந்த ஸ்தலம். இவ்வூரினருகே நம்பி மலை, நம்பியாறு, நம்பியான் விளை ஆகிய இடங்களைக் காணலாம். சிங்கமுகன், தாரகன், சூரபத்மன் ஆகிய மூவரின் மாயையின் வடிவம் கொண்ட தாராசுரனை முருகன் சம்ஹாரம் செய்த இடம் என்பார்கள். தேவ வடிவமாயிருந்த முருகப் பெருமானை, பிம்ப வடிவமாக இங்கு கோவில் கொள்ளுமாறு தேவேந்திரன் வேண்டியதன் பேரில், காட்சி தந்தார் எனக் கூறப்படுகிறது.
உயரமான குன்றின் மீதுள்ள குடைவரை குகைக் கோவில். ஏறிச் செல்ல வசதியாக அடுக்கடுக்கான படிகளை அமைத்துள்ளனர். குகை போன்ற பிரதான மூலஸ்தானத்தில் குமரக் கடவுள் அழகே உருவாக எழுந்தருளி அருள் புரிகின்றார். பிரசித்தி பெற்ற வைரம் பொதித்த வேல் இருக்கிறது. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். வள்ளிக்கு தனி சந்நிதியும் உண்டு. குகையை அடுத்து சற்று தள்ளி வடக்கே உள்ள சந்நிதியில் ஜெயந்தீஸ்வரரும் சௌந்தர நாயகி அன்னையும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். சிவகாமி உடனாய நடராஜர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், வீரபாஹு, வீரமஹேந்திரர் ஆகியோரையும், மஹா மண்டபத்தில் விசாலாட்சி சஹித விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். அவரருகே உள்ள பாறையில் சதுர குழிகளை செதுக்கியுள்ளனர். இதில் எள்தீபம் ஏற்றுகின்றனர். முருகனால் உருவாக்கப்பட்ட சரவணப் பொய்கை அழகாக இருக்கின்றது. ஸ்நானம் செய்ய ஏற்றது. அதன் பக்கத்திலுள்ள மற்றொரு குளம் தேவையில்லாத விஷயங்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர். கிரிப்ரதட்சிணம் செய்கின்றனர். கிரி வலப் பாதை சீராகவும் அழகாகவும் அமைத்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.