அருள்மிகு மதுசூதனப் பெருமாள் திருக்கோவில் (பறக்கை)

God Name : மதுசூதனப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

காஞ்சிபுரத்து சிற்பி ஒருவன் மரத்தினால் கருடன் சிலை ஒன்றை உருவாக்கினான். சிலை தத்ரூபமாக அமைந்து பறக்கத் தொடங்கியதாம். சிற்பி உளியை அதன் மீது வீசி இறக்கையை பின்னப்படுத்தினான். காயம்பட்டதால் மேற்கொண்டு பறக்க இயலாமல், 'மதுசூதனா' என்று கத்தியபடி இத்தலத்து குளத்தருகே வந்து வீழ்ந்தது. அந்த அழகிய மரச்சிலைதான் இங்கு பூஜிக்கப்படுகிறது. அடிபட்ட பறவை இறக்கை வலியுடன் வந்து இறங்கியதால் இவ்வூர் 'பறக்கை' எனப் பெயர் கொண்டது. மது எனும் அசுரனை வதம் செய்த திருமாலுக்கு 'மதுசூதனன்' என்று பெயர் வந்தது.
மூலஸ்தானத்தில் மூலவராக மதுசூதனப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சங்கு, சக்கரம், அபய ஹஸ்தம் கொண்ட சதுர்புஜங்கள். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பெரிய திருவடியும், சிறிய திருவடியும் துவார பாலகர்களாக இருபுறமும் நிற்கின்றனர். முதல் பிரகாரத்து தென்மேற்கு சுவரை கருடமுக்கு என்பார்கள். மரத்தால் செய்யப்பட்ட அழகான கருடன் ஆடி மாத ஸ்வாதி தினத்தன்று கருடனுக்கு பரிவட்டம் கட்டுகின்றனர். கோவிலின் முன்புறம் அழகிய தெப்பக்குளம். தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கொடிமரம் சூரிய ஒளியில் ஜொலிக்கும். புன்னை மரத்தை கூரையாகக் கொண்ட நாகர் கோவிலொன்றும் இருக்கின்றது. மகாதேவர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.