அருள்மிகு ஸ்ரீ ஆதி வராஹப் பெருமாள் திருக்கோவில் (காஞ்சி)

God Name : கள்வர் பெருமான்

Call : +91-

தான் மிகவும் அழகாக இருப்பதினால், கர்வம் கொண்ட மகாலட்சுமி திருமாலிடம் தர்க்கம் செய்கிறாள். புற அழகிற்கு முக்கியத்துவம் தரும் லட்சுமிக்கு, தகுந்த பாடம் புகட்ட எண்ணிய திருமால், "உனது அழகு ரூபம் மறைந்து அரூபமாகப் போவாய்" என சாபம் கொடுக்கிறார். சாப விமோசனம் வேண்டி பூலோகம் வந்த மகாலட்சுமி, காஞ்சி காமாட்சி ஆலயத்தினுள் அமர்ந்து தவம் செய்கின்றாள். சாபத்தால் கரிய நிறம் கொண்ட மகாலட்சுமி, உமையவளை வழிபடுகிறாள். காமாட்சியின் யோசனைப்படி, தனது கருமையை சாந்தாக பதிவு செய்து வைக்கின்றாள். சேவார்த்திகள் அதை திலகமாக அணிவதாலும், திருமாலின் கிருபையாலும் அரூப வடிவம் நீங்கி, மீண்டும் அழகு பெற்று சௌந்தர்ய லட்சுமியாகிறாள். சௌந்தர்ய லட்சுமியைக் காண வந்த திருமால் ஒளிந்து கொண்டு பார்த்ததால், கள்வர் என திருநாமம் கொண்டார். காமகோட்டத்து பஞ்சகங்கை தீர்த்தக் கரையில் காமாக்ஷியும் - லட்சுமியும் பேசிக் கொண்டிருந்ததை ஒளிந்திருந்து கேட்டதால் கள்வர் எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
காயத்ரி மண்டபத்தின் வலப்புறமாக உள்ள மூலஸ்தானத்தில், மூலவரான கள்வர் பெருமான், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தங்கையின் வீட்டில் அண்ணன் எழுந்தருளி இருக்கும் சிறப்பான கோலம். ஆதி வராகப் பெருமாளே இங்கு வராக திருவுருவில் இல்லாமல் மாலவனாக தரிசனம் தருகின்றார். இவருக்கு சாம்பிராணித் தைலத்தில் திருமஞ்சனம் செய்வது சிறப்பு என்பர். காமாட்சி அம்மனின் மூலஸ்தானத்தின் இடது புறமாக, தாயார் மகாலட்சுமியாகிய அஞ்சிலைவல்லி வணங்கிய கோலத்தில் தரிசனம் தருகின்றார். பின்புற சுவரில் இவருக்கு நேராக அரூப லட்சுமி எழுந்தருளியுள்ளார். இத்திருவுருவத்தின் மீது பக்தர்கள் குங்குமத்தால் அர்ச்சித்து, அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து இட்டுக் கொள்கின்றனர். சாந்து சாத்தியும் வழிபடுகின்றனர். இப்படி செய்வதால் அழகின் மீதுள்ள பற்று குறைவதாக கூறுகின்றனர். முதலில் அரூப லட்சுமியை சேவித்துவிட்டு பின்னர் தாயாரையும் பெருமாளையும் சேவிக்க வேண்டும் என கூறுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.