அருள்மிகு மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் (மண்டைக்காடு)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
சங்கராச்சார்யார் ஸ்ரீ சக்கர பூஜையினை தினமும் செய்வது வழக்கம். ஒரு நாள் பூஜை செய்து முடித்ததும் ஸ்ரீ சக்கரம் குடிலுக்கு திரும்பாதது கண்டு அங்கு போய்ப் பார்த்ததில் அங்கு பெரிய புற்று ஒன்று வளர்ந்திருப்பதை பார்த்தார். அந்த புற்றே மண்டைக்காட்டு பகவதி அம்மன். அங்கேயே இருந்து வழிபட்டுக் கொண்டிருந்து பின்னர் ஜீவசமாதி அடைந்தார் எனக் குறிப்பொன்று கூறுகிறது. பல காலம் கழித்து ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் புல்லை செதுக்கிக் கொண்டிருக்கும்போது இங்கு புதைந்துள்ள புற்றின் மீது ஆயுதம் பட்டு ரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. பயந்து போன சிறுவன் ஊர் மக்களை கூட்ட, புற்று வடிவிலிருந்த அன்னையைக் கண்ட ஊர் மக்கள் அன்னைக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் என ஸ்தல வரலாறு. லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து வழிபடும் அன்னை பகவதி மிகுந்த வரப்பிரசாதி. பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படும் இவ்வூருக்கு பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு வருகின்றனர். 41 நாட்கள் விரதமிருந்து வழிபடுகின்றனர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மண்டைக்காட்டு பகவதி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். புற்று மண் மேடாகக் குவிந்து புற்று வடிவில் அமைந்தவள். 15 அடி உயர புற்று. உற்சவ மூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. உற்சவருக்கே அபிஷேகம் செய்கின்றனர். அரபிக் கடலோரம் அமைந்துள்ள இவ்வாலயம் 1400 வருடங்கள் பழமையானது. இங்கு பிரசாதமாக புட்டமுது தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.