அருள்மிகு ஸ்ரீ ராகவேஸ்வரர் திருக்கோவில், தெரிசனங்கோப்பு
God Name : ஸ்ரீ ராகவேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
பாளையாற்றின் கரையிலுள்ளது தெரிசனங்கோப்பு எனும் ஊர். ஆதி ராமேஸ்வரம் எனப் போற்றப்படும் ஸ்தலம்.
இங்குள்ள தாடகை மலை - அரக்கி தாடகையே தலைவிரி கோலமாய் படுத்திருப்பது போல இருக்கும்.
முனிபுங்கர்கள் மேற்கொள்ளும் வேள்விகளை சீர்குலைப்பதையும் அவர்களை துன்புறுத்துவதையும் அன்றாட செயல்களாக கொண்டிருந்தாள் தாடகை எனும் அரக்கி. தாம் மேற்கொள்ளவிருக்கும் தவம் ஒருங்கே நடைபெற, துணைக்கு ராம - லக்ஷ்மணர்களை அழைத்து செல்கிறார் விஸ்வாமித்ரர். வனத்தில் எதிர்பட்ட தாடகை ராம - லக்ஷ்மணர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தாள். ராமன் செலுத்திய மூன்று அம்புகள் ஒன்றோடொன்றாக சரம் கோர்த்தபடி சென்று தாடகையை அழித்தன.
இதனால் திரு - சரம் - கோப்பு எனப் பெயருற்று பின்னர் மருவி தெரிசனங்கோப்பு என்றானது.
தாடகையை வதம் செய்த தோஷம் நீங்கிட ஸ்ரீ ராமபிரான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கமே ஸ்ரீ ராகவேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
மூலவர்: ஸ்ரீ ராகவேஸ்வரர்் அம்பாள்: ஸ்ரீ உலகநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ ராகவேஸ்வரர். பதினெட்டு ஆவுடைகளால் உயர்த்தப்பட்டுள்ள அழகிய சிவலிங்க மூர்த்தம். ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அம்பாள் உலகநாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
மூலவரின் சந்நிதி முன்பாக துவிபுஜ விநாயகர் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஜடா முடிக்கு மாற்றாக கிரீடம் அணிந்துள்ளார். திருவடியின் கீழ் முயலகன் மட்டுமல்லாது நாகமும் கொண்டு வித்தியாசமாக தரிசனம் தருகின்றார்.
ஸ்வர்ணாகர்ஷன பைரவர் விசேஷ மூர்த்தமாக உள்ளார்.
ஸ்தல வரலாற்றுத் தொடர்புடைய தாடகை வதம் கல் உத்திரத்தில் புடைப்பு சிற்பமாக உள்ளது. மகா மண்டபத் தூணில் ஆதி சங்கரர் காணப்படுகிறார். ஸ்ரீ ராமர் பாதம் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.