அருள்மிகு பூதலிங்கேஸ்வரர் திருக்கோவில் (பூதப்பாண்டி)
God Name : பூதலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குகைக்கோவிலை மூலஸ்தானமாக அமைத்துள்ளனர். சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ள பூதலிங்கேஸ்வரரின் அழகிய வடிவம் மனதை விட்டு அகலாதது. சுயம்பு ஸ்வரூபம். "சாலியன் கண்ட திருமேனி" என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவறையை பிரதட்சிணம் செய்ய இயலாது. வலப்பக்கம் உள்ள தனி சந்நிதியில் அம்பாள் சிவகாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அம்பாள் சந்நிதி முன்பாகக் காணப்படும் ரதி - மன்மதன் சிற்பங்கள், ராமர் - வாலி சிற்பங்கள் ஆகியன அற்புதமாக உள்ளன. மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபங்களில் காணப்படும் சிற்பங்கள் அற்புதமான வேலைப்பாடுகளை உடையவை. விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி சமேத நடராஜர், சூரியன், பரசுராமர், ஆதி சங்கரர், காசி விஸ்வநாதர், உலகநாயகி ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. கோவிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் அரச மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள விநாயகரின் சிலை, மரத்தின் உட்பகுதிக்குள் மறைந்து ஒரு குகைக்குள் விநாயகர் இருப்பது போன்ற தோற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. இவருக்கு "நினைத்ததை முடிக்கும் விநாயகர்" என்று திருநாமம். துலாபாயாச நைவேத்தியம் செய்கின்றனர். காவல் தெய்வமாக இருக்கும் காளிக்கு ஒரு கோவில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.