அருள்மிகு விஸ்வரூப கிருஷ்ணன் திருக்கோவில் (திப்பிரமலை)

God Name : விஸ்வரூப கிருஷ்ணன்

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

அக்கம்பக்க வீடுகளில் வெண்ணெய் களவாடியதை கேள்விப்பட்டு கோபமுற்ற யசோதா, கண்ணனை உரலில் கட்டிப் போட்டதும், தன்னை தண்டித்த யசோதைக்கு கிருஷ்ணன் காட்டி நிற்கும் விஸ்வரூப கோலத்தை அப்படியே இங்கே காட்டுகிறார். இயற்கை சீற்றத்தால் பூமியுள் புதையுண்டு கிடந்த இக்கோவிலை, தேவ ப்ரஸன்னத்தில் கண்டுபிடித்து மீண்டும் ஸ்தாபித்துள்ளனர் என்று குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மூலஸ்தானத்தில் நெடிதுயர்ந்த திருமேனியுடன் வாசுதேவன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றார். பதினாறு அடி உயர அழகிய திருவுருவமாக விஸ்வரூபம் காண்பித்து சேவை சாதிக்கின்றார். அருகே கிருஷ்ணனின் தாயார் யசோதை காணப்படுகிறாள். வலது கரத்தில் வெண்ணெயும், இடது கரத்தில் கதையும் கொண்ட கீழிரு கரங்களுடனும், சங்கு - சக்கரம் ஏந்திய மேலிரு கரங்களுடனும் காட்சி தரும் மூலவரின் அழகு வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. வலது கையில் வெண்ணெயும் இடது கையில் கரண்டியுமாக காணப்படும் யசோதாவின் திருவுருவம் தத்ரூபமாக உள்ளது. கூம்பு வடிவ விமானம் கொண்டு கேரள பாணியில் கட்டப்பட்ட கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.