அருள்மிகு மசான மூர்த்தி மஹாதேவர் திருக்கோவில் (கேரளபுரம்)

God Name : மசான மூர்த்தி எனப்படும் மஹாதேவர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

இப்பகுதியை அரசாண்ட மன்னன் தீவிர சிவபக்தன். தான் இறந்த பிறகு தனது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழுப்ப வேண்டும் என ஆசை கொண்டிருந்தான். இவருக்கு பின்னர் அரசாள வந்த மன்னனால் முந்தைய மன்னனின் ஆசை நிறைவேற்றப்பட்டது. உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளிய மூலவர் என்பதால் மசான ருத்ரர் என அழைக்கப்படலானார். இவ்வாலயத்து அதிசய விநாயகரின் கால் ஒடிந்திருப்பதன் காரணம் என்னவென்று செவி வழி கதை ஒன்று நிலவுகிறது. அதாவது இவ்வாலயத்து அர்ச்சகர் ஒருவரை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார் வயோதிகர் ஒருவர். பல முறை முயன்றும் தோல்வியே கிட்டியதாம். ஒரு நாள் அர்ச்சகர் வீட்டிற்கு சென்ற வயோதிகர் அவரது வீட்டுக் கதவை தட்டினார். கோபத்தில் வயோதிகரை தள்ளிவிட்டார் அர்ச்சகர். இதனால் வயோதிகரின் கால் ஊனமுற்றது. மறு நாள் அர்ச்சகர் கோவிலுக்கு சென்று விநாயகர் சந்நிதி முன்பு நின்ற போது, விநாயகர் விக்ரஹத்தின் கால் ஊனமுற்றிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். வயோதிகராக வந்தவர் விநாயகர் என்பதை அறிந்து, தனது செய்கைக்காக மிகவும் வருத்தப்பட்டார் எனும் கதை வழக்கத்திலுள்ளது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான மசான மூர்த்தி எனப்படும் மஹாதேவர். வீரகேரளபுரத்து மகாதேவர் என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இந்த மசான ருத்ரர் சுயம்பு அல்ல. மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மாலை வேளையில் தீபாராதனை நடைபெறும்போது சிவலிங்கத்தை இரண்டு பர்லாங் தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். நந்தி மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. ராம - லக்ஷ்மணர்கள், குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரின் சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. உலோகப் படிமமான சிதம்பரேஸ்வரர் சிற்பமும், உபதேவதைகளின் படிமங்களும் உட்கோவிலில் அழகாக உள்ளன. வெளிப்பிரகாரத்தில் ஆல மரத்தடியில் கூரையின்றி வெய்யில் - மழை பொருட்படுத்தாது எழுந்தருளியுள்ள விநாயகர் இவ்வாலயத்து விசேஷ மூர்த்தியாக போற்றப்படுகிறார். இவர் மிகுந்த வரப்ரசாதி. இந்த அதிசய விநாயகர் உத்தராயண காலத்தில் (மாசி முதல் ஆடி வரை) வெண்மை நிறத்துடனும், தட்சிணாயண காலத்தில் (ஆவணி முதல் தை வரை) கருப்பு நிறத்துடனும் காட்சியளிக்கின்றார். இவரை வெகு நேரம் உற்றுப் பார்த்தால் கண்கள்கூசுமாம். சந்திரகாந்தக் கல் கொண்டு உருவாக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. ஒரு கால் சற்று ஒடிந்த நிலையில் காணப்படுகிறது. உட்கோவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது. கேரள கட்டட அமைப்பை சார்ந்து உள்ளது. நந்தி மண்டபம் மட்டும், திராவிட சிற்பக்கலையை பின்பற்றி கட்டியுள்ளனர். நாலம்பலம், மடைப்பள்ளி, ரிஷப மண்டபம் ஆகியனவற்றை உள்ளடக்கிய கோவில். ஸ்தல விருட்சமான ஆலமரத்தடியில் நாக பிரதிஷ்டைகள் உள்ளன. நவநீத கிருஷ்ணன் கோவிலொன்றும் அருகே இருக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.