அருள்மிகு ஆதி கேசவப் பெருமாள் திருக்கோவில் (திருவட்டாறு)

God Name : மூலவர்: ஆதி கேசவப் பெருமாள், உற்சவர்: ஆதி கேசவர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

விதிமுறைகளை கடைப்பிடிக்காது பிரம்மன் நடத்திய வேள்வியின் யாக குண்டத்திலிருந்து கேசன் எனும் அரக்கனும், கேசி எனும் அரக்கியும் தோன்றினார்கள். பிரம்மனிடமிருந்து சாகா வரமும் பெற்று தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். கேசனுடன் மற்போர் புரிந்து தோற்கடித்து அவனை கீழே தள்ளி, அவன் மீது ஆதிசேஷனை பாயாக விரித்து அதன் மேல் பள்ளி கொண்டார் திருமால். சாகாவரம் பெற்ற கேசன் தப்பாமலிருக்க, அவன் மீது சயனித்து அவனை ஒடுக்கி விட்டார். கேசனின் தோல்வியைப் பொறுக்காத அவனது சகோதரி கேசி எனும் அரக்கி, பழி வாங்கும் விதமாக தாம்ரபரணியை பிரளயமாக பெருக்கி அனுப்பினாள். பூமாதேவி இந்த இடத்தை மேடாக்கினாள். தாம்ரபரணி இரண்டாக பிரிந்து ஒரு மாலை போல் கோவிலைச் சுற்றி வட்டமாக சென்றது. இதனால் இவ்வூருக்கு திருவட்டாறு எனப் பெயர் வந்தது. கேசனை ஒடுக்கியதால் திருமாலுக்கு ஆதி கேசவர் எனும் திருநாமம். நதிகள் இரண்டாக பிரியும் இடத்திற்கு மூவாத்து முகம் (அ) கோதை பிரளி என்று பெயர். (தாம்ரபரணி - பரளியாறு - கோதையாறு மூன்றும் கூடுமிடம்) சித்திரை விழாவின் போது இங்கு தீர்த்தவாரி நடக்கும். தளி எனுமிடத்திலுள்ள சிவாலயம் அருகே தீர்த்தவாரி நடக்கும். ஆற்காட்டு நவாப்பின் படைகள் இவ்வாலயத்தை சூறையாடி விட்டு விக்ரகத்தை எடுத்துச் சென்றனர். உற்சவ விக்ரகம் நகர்ந்து கொண்டே இருப்பது கண்டு அதன் காலில் துளையிட்டு கயிற்றால் கட்டி வைத்தான் நவாப். அவன் மனைவிக்கு தீராத வயிற்று வலி வந்து கஷ்டப்பட்டாள். விக்ரகத்தை திருப்பிக்கொடுத்ததும் வயிற்று வலி நீங்கி நலன் பெற்றாள் எனக் குறிப்பொன்று கூறுகிறது. நன்றிக் கடனாக தங்கத்தட்டு, தங்க தலையணை போன்றவற்றை நவாப் கொடுத்துள்ளார். உற்சவருக்கு குல்லாய் போட்டு யோக மண்டபத்தில் அல்லா பூஜை எனும் விசேஷ பூஜை செய்கின்றனர். சந்திரன், பரசுராமர் வழிபட்ட தலம். சைன்ய மஹா பிரபு இங்கு வந்துள்ளார். வசிஷ்ட மகரிஷி வாசம் செய்த தலம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஆதி கேசவப் பெருமாள், உற்சவர்: ஆதி கேசவர், தாயார்: மரகதவல்லி. மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு புஜங்கசயனராய் சேவை சாதிக்கின்றார் ஆதி கேசவப் பெருமாள். சிரசை தெற்கில் வைத்து திருவடிகளை வடக்கில் வைத்து காட்சி தருகின்றார். 22 அடி நீள அழகிய திருமேனி. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் முதல் வார மாலை நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமுக மண்டலம் மீது படர்ந்து அழகு சேர்க்கிறது. 18 படிகள் ஏறி மூலஸ்தானம் சென்று சேவிக்க வேண்டும். கர்ப்பக்ரஹத்தின் மேல் அஷ்டாங்க விமானம் உள்ளது. 16008 சாளக்ராமங்களைக் கொண்டுள்ள அழகிய திருமேனி. கடுசர்க்கரை யோகம் எனும் விசேஷக் கலவையைக் கொண்டு உருவாக்கப்பட்ட திருவுருவம். தங்கத்தால் பொதியப்பட்டுள்ளது. சேர நாட்டு ஸ்ரீரங்கம் எனப் போற்றப்படும் இத்தலம் திருவனந்தபுரக் கோவிலைப் போல் புனிதமானது என்பர். கருவறையில் கருடாழ்வார், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது - கைடபர்கள் காணப்படுகின்றனர். சிரசருகே ஹாதலேய மகரிஷியைக் காணலாம். மூலவரின் திருமுகம், திருமேனி, திருவடிகள் என மூன்று பகுதிகளாக, கருவறை முன்பாக உள்ள மூன்று வாசல்களின் வழியே சேவிக்க வேண்டும். நடுவாசலின் கீழே உள்ள பீடத்தில் உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர். ஸ்ரீ தேவி - பூதேவி உடன் இருக்க ஆதி கேசவர் உற்சவராக சேவை சாதிக்கின்றார். கதலிப்பழ பிரியர். தாயார் மரகதவல்லியின் அழகான திருவுருவத்தை சேவிக்கலாம். ஸ்ரீபலிபுரம் அருகே ஸ்ரீ பூதநாதர் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீபலிபுரத்தில் 224 தீப லட்சுமிகளின் கருங்கல் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. பலிபீட மண்டபத் தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் பேரெழில் கொண்டவை. உதய மார்த்தாண்ட மண்டபத்திலுள்ள விநாயகரின் திருமண ஊர்வலக் காட்சிகள் மரத்தில் அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ளது. கூரையிலிருந்து தொங்கும் சங்கிலி ஒரே மரத்துண்டில் செய்யப்பட்டது. குழலூதும் வேணுகோபாலன் சந்நிதி கொண்டுள்ளார். உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.