அருள்மிகு ஓதீஸ்வரர் திருக்கோயில் (மடிப்பாக்கம்)
God Name : ஓதீஸ்வரர் எனப்படும் வேதபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: ஆதி காலத்தில் இவ்விறைவனை மழுவுடையார் என்றும் இவ்விறைவியை மாதுளம்கனியம்மை என்றும் அழைக்கப்பட்டதாக சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூகம்ப இடிபாடுகளினால் கவலையுற்ற மன்னன் சர்வஜித் என்பவனும், அதிக பளுவாக இருக்கும் பூமியின் பாரத்தை குறைக்க வேண்டி கோரிக்கையுடன் ஆதிசேஷனும் இங்கு தவமிருந்து இவ்விறைவனை வழிபட்டு நலம் பெற்றனர் என ஸ்தல வரலாறு. நித்ய பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியன யாவும் சிறப்பாக நடத்துகின்றனர். திருமணத்தடை விலக, புத்ர பாக்யம் பெற பிரார்த்தனை செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஓதீஸ்வரர். இவருக்கு வேதபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வியாசர் வழிபட்ட லிங்கம் என்பதால் ஓதீஸ்வரர் எனும் திருநாமம். அம்பாள் ஓதீஸ்வரி எனப்படும் வேதபுரீஸ்வரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வரசித்தி விநாயகர், முருகப் பெருமான், பூர்ணா - புஷ்கலாவுடன் காட்சி தரும் சாஸ்தா, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களும், சிவாலய கோஷ்ட மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.