அருள்மிகு ஸ்ரீ வீரபத்ர மஹாதேவர் திருக்கோவில், திற்பரப்பு

God Name : ஸ்ரீ மஹாதேவர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

ஸ்தல வரலாறு: தட்சனை வதம் செய்து முடித்ததும், அந்த கோபத்துடன் இறைவன் வந்து அமர்ந்த இடம் என்பார்கள். அதை தவிர்க்கும் பொருட்டு நந்திதேவர் சற்று விலகி கருவறை ஓரத்தில் ஒதுங்கி இடம் பிடித்துள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. புராண வரலாறு: விஷ்ணுவை பிடிக்காத புருஷா மிருகத்திற்கும், புஜ பலமே சிறந்தது என நம்பும் பீமனுக்கும், ஹரியும் - சிவனும் ஒன்றே என்பதை உணர்த்த கிருஷ்ணர் ஒரு திட்டம் வகுத்தார். ராஜசூய யாகம் நடத்த முற்பட்ட தர்மர், யாகத்திற்காக புருஷா மிருகத்தின் பாலைக் கொண்டு வரும்படி பீமனைப் பணித்தார். வைணவத்தை வெறுக்கும் அதனிடம் பாலை எப்படி பெறுவது என யோசித்தான் பீமன். புருஷா மிருகத்தை ஏமாற்றும் திட்டத்தை, ஸ்ரீ கிருஷ்ணர், பீமனுக்குச் சொல்லித் தந்து, பன்னிரண்டு ருத்ராட்சங்களையும் கொடுத்தார். புருஷா மிருகம் தவம் செய்து கொண்டிருந்த ஊரான திருமலை எனும் ஊரின் எல்லைக்குச் சென்ற பீமன், "கோவிந்தா... கோபாலா" என உரக்கக் கூவினான். தவம் கலைந்து கோபம் கொண்ட புருஷா மிருகம் பீமனை ஓட ஓட துரத்தலாயிற்று. புருஷா மிருகம் பீமனைப் பிடிக்க நெருங்கும் சமயம், பீமன் தன் கையிலிருந்த ருத்ராட்சங்களில் ஒன்றை கீழே போட்டான். உடனே அந்த ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. துரத்தி வந்த புருஷா மிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும் சுற்றி வந்து பூஜை செய்ய ஆரம்பித்தது. இப்படியே மற்ற பதினொரு ஊர்கள் வரை புருஷா மிருகம் துரத்துவதும், பீமன் ஓடுவதுமாகத் தொடர்ந்தது. பீமன் ஒவ்வொரு ருத்ராட்சமாக கீழே போடுவதும் அது லிங்க வடிவம் பெறுவதும், துரத்தி வந்த புருஷா மிருகம் பூஜை செய்வதும் தொடர்ந்தது. பன்னிரண்டாவது ஊரான திருநட்டாலத்தில் ருத்ராட்சத்தைக் கீழே போட்டு முளைத்த லிங்கத்தை பூஜை செய்து முடித்த புருஷா மிருகம், பீமனைப் பிடித்து விட்டது. அப்போது பீமனின் ஒரு கால், புருஷா மிருகத்தின் எல்லைக்குள்ளும் (அதாவது திருநட்டால எல்லைப் பகுதி) மற்றொன்று அதை தாண்டியும் இருந்தன. எல்லையைத் தாண்டி விட்டதால் தன்னை விட்டு விடும்படி பீமன் கேட்க, புருஷா மிருகம் மறுக்க, அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்கின்றனர். தம்பி என்று பாரபட்சம் பாராமல், எல்லைக்குள் ஒரு கால் இருப்பதால் பீமனின் பாதி உடல், புருஷா மிருகத்திற்கே சொந்தம் எனத் தீர்ப்புக் கூறினார் தர்மர். தீர்ப்பு நியாயமாக இருந்ததால் மகிழ்ந்த புருஷா மிருகம் தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்திற்கு உதவ சம்மதித்தது. பீமனையும் விடுவித்தது. இந்த சமயத்தில் அங்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணர், ஹரியும் - சிவனும் ஒன்றே என பீமனுக்கும் - புருஷா மிருகத்திற்கும் உணர்த்தினார். பீமன் கீழே போட்ட ருத்ராட்சங்களிலிருந்து முளைத்த சிவலிங்கங்களையே பன்னிரண்டு சிவாலயங்களிலும் காணலாம். இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தவே வருடந்தோறும் சிவராத்திரியன்று பக்தர்கள் சிவாலய ஓட்டமாக ஓடி பன்னிரண்டு மஹாதேவர்களை தரிசனம் செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் - மூன்றாவது கோவில்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ மஹாதேவர் எழுந்தருளியுள்ளார். இது ஒரு சுயம்பு லிங்க மூர்த்தம். சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உமையன்னை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கோவில் மேற்கு நோக்கி அமைந்த வட்ட வடிவமானது. வலச்சுற்றில் விநாயகர், சுப்ரமண்யர், பகவதி, பாலகிருஷ்ணன், சாஸ்தா, ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பாம்பு ஒன்று தவளையைப் பிடிப்பது போன்ற சிற்பம் வெளிப் பிரகாரத்திலுள்ளது. பதினொரு சிவாலயங்களில் விபூதி பிரசாதமும், பன்னிரண்டாவது சிவாலயத்தில் சந்தனமும் தருகின்றனர். திற்பரப்பு அருவி ஒரு சுற்றுலாத் தலமாகவும் பிரபலமாகவும் இருப்பதால், அதை ஒட்டியுள்ள இக்கோவிலை எளிதில் கண்டறியலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.