பஞ்சமுக ஹனுமன் கோவில் (ராமேஸ்வரம்)
God Name : செந்தூர ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
அழகான ஸ்ரீ ராம - சீதா திருவுருவங்களை பிரதான கருவறையில் சேவிக்கலாம். சிறு மண்டபம் ஒன்றில் பஞ்சலோக விக்ரஹங்களை காணலாம். செந்தூர ஆஞ்சநேயர் சிலா வடிவமாக பெரிய அளவில் காட்சி தருகிறார். நாகப் பிரதிஷ்டைகள் நிறைய வைத்துள்ளனர். வானர சேனைகள் சேதுபந்தனம் கட்ட உபயோகப்படுத்திய மிதக்கும் கற்களைக் காணலாம். தூக்கினால் கனம் தெரியவில்லை. அளவில் பெரியதாக இருந்தாலும் இடையிடையே சிறு சிறு துவாரங்கள் தேன் கூடு அல்லது பவளக் கூடு போல் இருக்கின்றன. அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் போட்டால் மிதக்கின்றன. இந்த கல்லை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். செப்பு பாத்திரம் ஒன்றில் ஜலம் விட்டு கல்லை அதில் மூழ்கடித்து சில மணி நேரங்கள் வைத்திருந்து விட்டு பருகினால் மூட்டுவலி குணமடைவதாக நம்புகின்றனர். கோவிலருகே உள்ள தீர்த்தங்கள்: 1) நாக தீர்த்தம் - கோவிலின் வடகிழக்கே, தேவஸ்தான மடம் அருகே 2) அகஸ்திய தீர்த்தம் - கோவிலின் வடகிழக்கே உள்ளது
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.