அருள்மிகு புற்றிடங்கொண்டீசர் திருக்கோவில் (திருவெற்றியூர்)
God Name : புற்றிடங்கொண்டீசர் என்கிற வன்மீகநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
'ஜெயபுரி' என்கிற சம்ஸ்க்ருத சொல்லையே தமிழில் 'வெற்றியூர்' என அழைக்கின்றனர். இக்கோவில் பாகம்பிரியாள் கோவில் என்றே பிரசித்தம். முற்பிறவியில் எலியாக இருந்து, விளக்கின் திரியைத் தூண்டிவிட்டு ஒளி பரவச் செய்ததால், அடுத்த பிறவியில் பெரிய சக்ரவர்த்தியாக அரசாண்டான். அவனே மாபலி. அவன் தான தர்மங்கள் நிறையச் செய்து மக்களிடம் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டான். அவனது அகம்பாவத்தை ஒடுக்க எண்ணிய திருமால், ஓர் ஏழை அந்தணனாகச் சென்று யாகசாலை அமைக்க மூன்றடி மண் கேட்டார். மன்னன் தானம் தருவதாக வாக்களித்ததும், விஸ்வரூபம் எடுத்து பூவுலகை முதல் அடியாகவும், இரண்டாம் அடியாக ஆகாயத்தையும் அளந்து, மூன்றாம் அடிக்கு இடமில்லாததால் தனது தலையைக் காட்டிய மாபலியின் தலையில் பாதம் வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தினார் விஷ்ணு. தர்மத்தின் காவலன் மாபலி மறைந்ததால் தர்ம தேவதை கண்ணீர் விட்டாள். அவளது கண்ணீர்த் துளிகள் திருமாலின் பாதத்தில் பட்டதால் அவரது காலில் புற்று வளரத் தொடங்கியது. தனக்கு வந்த அவதியை போக்கிக்கொள்ள இத்தலம் வந்த திருமால், இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, வில்வ மரத்தடியில் சுயம்புவாக இருந்த சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். திருமாலின் காலிலிருந்த புற்றும் நீங்கியது. இதனால் 'புற்றிடங்கொண்டீசர்' என்ற திருநாமம் இவ்விறைவனுக்கு வந்தது. சுற்றிலுமுள்ள பல ஊர் மக்களுக்கு இது பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இது ஒரு தேவார வைப்புத்தலம்.
மூலவர்: புற்றிடங்கொண்டீசர் என்கிற வன்மீகநாதர், அம்பாள்: பாகம்பிரியாள். மூலஸ்தானத்தில் புற்றிடங்கொண்டீசர் என்கிற வன்மீகநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி. சுவாமிக்கு பழம்புற்று நாதர் என்கிற பெயரும் உண்டு. சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை பாகம்பிரியாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விநாயகப் பெருமானை வில்வ மரத்தடியில் தரிசிக்கலாம். மாவிளக்கு பிரார்த்தனை நிறைவேற்றுவோரின் வசதிக்காக பிரகாரத்தில் உரல்கள் வைக்கப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.