அருள்மிகு தண்டீஸ்வர அய்யனார் திருக்கோவில் (அல்லி நகரம்)
God Name : தண்டீஸ்வர அய்யனார்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள தண்டீஸ்வர அய்யனார் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வம். இடக்காலை யோகக் கலை போல் குத்திட்ட நிலையிலும், வலக்காலை தொங்கவிட்ட நிலையிலும், இடது கரத்தை முழங்கால் மீது இருத்தியும், வலது கரம் வரமளிக்கும் பாவனையிலும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி.
பிரகார வலத்தில் வெள்ளாளங் கருப்பு, முத்துப் பேச்சி, இருளாயி, சமயன்சாமி, தாழம்பூ கருப்பு ஆகிய ஐந்து பரிவார தேவதைகளையும் ஆதிமூல லிங்கத்தையும் தரிசிக்கலாம்.
கிழக்கு பார்த்த சந்நிதியில் முத்துக் கன்னி, காமாட்சி, பெரியராஜா, ஆதி நாராயணன், துல்லு குட்டி, போத்தி ராஜா, சன்னாசி ஆகிய ஏழு கிராம தேவதைகளை தரிசிக்கலாம். வைகை வெள்ளப் பெருக்கில் மிதந்து வந்த பெட்டியிலிருந்து கிடைத்த சிலைகள் என தகவல்.
ஆலயத்துள் நுழையும்போதே இரண்டு பக்கங்களிலும் இரண்டு பிரம்மாண்டமான பூத கணங்கள். இடது பக்கமாக வெள்ளாளங் கருப்பையும் சாட்டையை சுழற்றியபடி நிற்கும் தண்டீஸ்வரரையும் காணலாம்.
இரட்டை மண்குதிரைகளை காணிக்கையாக செலுத்தும் புரவி எடுப்புத் திருவிழா பிரசித்தம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.