அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் (நாட்டரசன் கோட்டை)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக தரிசனம் தரும் கண்ணாத்தாள் மிகவும் சக்தி வாய்ந்த வரபிரசாதி. சண்டனை அடக்கிய கோலத்தில் காட்சி தருகின்றாள். அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. சுயம்பு. வடக்கு நோக்கிய சந்நிதி. 855 பவுனில் அங்கி செய்து அன்னைக்கு அணிவிக்கின்றனர்.
புகழ் பெற்ற சொக்கட்டான் சாரி மண்டபம் ஒற்றைக்கல்லால் அமைந்த நான்கு தூண்களில் நிற்கிறது. தூணின் சுற்றளவு 16 அடி.
12 ஆண்டுகட்கு ஒரு முறை நடக்கும் களியாட்டத் திருவிழா தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும்.
தை மாத முதல் 3 நாட்கள் அல்லது கடைசி செவ்வாய் ஊரே ஒன்று கூடி கண்ணாத்தாளுக்கு பொங்கலிடுவர். கருப்பண்ண சுவாமி கோவிலின் சாமியாடிகள் ஏழு பேரையும் மேளதாளத்துடன் இங்கு அழைத்துக் கொண்டு வருவார்கள். கிடா வெட்டி முடிந்ததும், பொங்கலிட்டதும் சாமியாடிகள் ஏழு பேரும் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கே திரும்பி சென்று விடுவார்கள்.
சிவராத்திரியன்று நடைபெறும் களறி திருவிழா தினத்தன்று இரவு கண்ணாத்தாள் கோவில் தெப்பக் குளத்திலிருந்து கரகம் எடுத்து வந்து காமாட்சி அம்மனிடம் வைத்து பூஜித்து கொண்டாடுவார்கள். எத்தகைய கண் நோயையும் தீர்ப்பவள் கண்ணாத்தாள்.
சிவகாமி உடனாய சோழீஸ்வரர் சிவாலயமும் ப்ரஸன்ன வெங்கடேசர் கோவிலும் இவ்வூரில் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.