கொல்லங்குடி வெட்டுடையா காளியம்மன் திருக்கோவில் (அரியாக்குறிச்சி)

God Name : வெட்டுடைய அய்யனார்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

தான் இருக்கும் இடத்தை குறிப்பால் உணர்த்தினார். அதன்படி மண்ணை அகழ்ந்தபோது அய்யனார் சிலை மண்வெட்டியால் வெட்டுப்பட்டது. வெட்டுடைய அய்யனார் எனப் பெயரிட்டு பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் எனத் தல வரலாறு கூறுகிறது.
கிழக்கு பார்த்த சந்நிதியில் பூரணி - புஷ்கலை தேவியர்கள் சகிதமாக வெட்டுடைய அய்யனார் எழுந்தருளியுள்ளார். பஞ்சகச்சம் கட்டி வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் தரிசனம் தருகிறார். வலது கரத்தில் தண்டம் வைத்துள்ளார். எதிரே யானை வாகனம் காணப்படுகிறது. மேற்கு பார்த்த பிரதான சந்நிதியில் மூலவராக எழுந்தருளியுள்ள வெட்டுடையா காளியம்மன் மிகவும் சாந்நித்யம் கொண்டு பிரபலமானவள். இடது காலை தொங்கவிட்டு உக்ர நிலையில் கம்பீரமாக அமர்ந்துள்ளார். எட்டு கரங்களில் கத்தி, கேடயம், வில், அங்குசம், அம்பு, கபாலம் மற்றும் அபய - வரத ஹஸ்தங்கள் கொண்டுள்ளார். அம்பிகையின் நேர் எதிரே கிழக்கு பார்த்தபடி அய்யனாரும் மேற்கு பார்த்தபடி அம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். காசு வெட்டி போட்டு நியாயம் கேட்கும் பக்தர்களுக்கு சத்தியத்தை நிலை நாட்டுபவளாக திகழ்கிறாள் இந்த காளி. சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் காலை வேளையில் அய்யனார் மீதும், மாலை வேளையில் காளி மீதும் படர்ந்து சூரிய பூஜை செய்கிறது. கருவறையின் பின்னால் சூலாயுதமும் அதைச் சுற்றி கம்பிகளும் வைக்கப்பட்டுள்ளன. நாணயம் ஒன்றை இரண்டாக வெட்டிப் போட்ட காசு குவியல்கள் கம்பிகளிடையே காணப்படுகின்றன. சோணைக்கருப்பசாமி கோவிலுக்கு வெளியே சந்நிதி கொண்டுள்ளார். அம்பிகையின் உத்தரவுகளை நிறைவேற்றி பணிசெய்யும் காவல் தெய்வமாக செயல்படுபவர். குறைகளைக் கூறிப் பிரார்த்தித்து 6 ரூபாய் தட்சணை செலுத்தி வேண்டிக் கொண்டு காசை இரண்டாக வெட்டிப் போடுகின்றனர். நீதிமன்றம் போல் செயல்படும் ஆலயம். அடியார்களின் கோரிக்கைகள் பழி தீர்ப்பதாக இருக்கக் கூடாதாம். பக்தியோடு வரும் நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கின்றாள் அன்னை. முறையீட்டுச் சீட்டுக் கட்டுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.