அருள்மிகு முத்து பெரியநாயகி திருக்கோவில் (தாழையூர்)

God Name : உசிலாவுடை அய்யனார்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

உசிலமரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் உசிலாவுடை அய்யனார். கிழக்கு பார்த்த சந்நதி. தேவியர்கள் உடன் உள்ளனர். சூரியன் தனது கிரணங்களால் நாள்தோறும் வழிபடும் இவரை வழிபடுபவர்களுக்கு ஆதித்ய சக்தி பெருகுகிறது. வன்னி மரத்தடியில் நினைத்ததைக் கொடுக்கும் விநாயகர் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார். வெளியே திறந்தவெளி கருவறைகளில் பதினெட்டாம்படி கருப்பர், சின்னக் கருப்பர், பெரியக் கருப்பர், சப்பாணிக் கருப்பர், காளி அம்மன், ராக்காச்சி அம்மன், சன்னாசி, உளி வீரன் ஆகிய கிராம தேவதைகளை தரிசிக்கலாம். பிரதான கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முத்து பெரியநாயகி - அரை வட்ட வடிவமான தலைக் கொண்டையுடனும், வலக்கை உயர்ந்து துகிலினை வீசியபடியும், இடக்கை அபிநயம் காட்டியும் கால்களிரண்டும் தாள ஜதிக்கு தக்கவாறும் அமைந்த அழகிய திருவுருவம். சந்தன மரசிலை என்பதால் அபிஷேகம் கிடையாது. அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைத் திரவியங்களை சாத்துகின்றனர். வேம்பும் அரசும் இணைந்த விருட்சம் உள்ளது. ஆலமரத்தடியில் சூலாயுதம் மற்றும் வேல் கம்பு வடிவில் தொட்டிக்கலை முனியப்பா நிற்கின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.