அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் (திருவடிசூலம்)
God Name : மூலவர்: ஞானபுரீஸ்வரர், உற்சவர்: சந்திரசேகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
சுரம் என்றால் குன்றுகளுடைய காடு எனப் பொருள். கல் மலைகளுக்கு இடையே அமைந்த கோவில் என்பதால் இடைச்சுரம் எனப் பெயர் கொண்டது. தற்போதையப் பெயர் திருவடிசூலம் என்பதாகும்.
கோ என்பது பசுவைக் குறிக்கும். காமதேனு பசு வடிவில் வந்த அம்பாள், அனுதினமும் இங்குள்ள லிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்வாள். இதனால் கோவர்த்தனாம்பிகை எனப் பெயர் கொண்டாள். அம்பாளின் பாலபிஷேக வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் மரகத லிங்கமாக காட்சி கொடுத்தார் என ஸ்தல வரலாறு.
புண்ய க்ஷேத்ரங்கள் பலவற்றிற்கு பயணித்துக் கொண்டிருந்த திருஞான சம்பந்தர் இத்தலமருகே வரும்போது பசியினாலும், வெயில் கொடுமையினாலும் துவண்டிருந்தார். தயிர்ப்பானை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்த இடையன் ஒருவன், ஞானசம்பந்தருக்கு தயிரைக் கொடுத்து பசியாற்றி விட்டு, வந்த நோக்கத்தை கேட்டறிந்தான்.
சிவாலயங்கள் சென்று வழிபட்டுக் கொண்டு வருவதை ஞானசம்பந்தர் விளக்கியதும், இவ்வுரிலுள்ள வனத்திலும் ஒரு சிவாலயம் இருக்கின்றது. வாருங்கள்.. என அழைத்துக் கொண்டு சென்றவன், குளக்கரை அருகே வந்ததும் மாயமாய் மறைந்து விட்டான்.
இடையனாக வந்து இடையிலேயே ஞானசம்பந்தரை விட்டுவிட்டதால் இடைச்சுரம் என்றானதோ?
இடையன் வடிவம் கொண்ட சிவபெருமானுடன் தானும் வரப் போவதாக பிடிவாதம் பிடித்தாள் அம்பிகை. இடது கால் முன்னால் வைத்து, வலது கால் பின்னால் வைத்து, நடக்க முற்படும் நிலைக்கு வந்தவளை தடுத்து நிறுத்தி விட்டார்.
முடியாது.. அவன் ஞானப் பால் குடித்தவன்.. உன்னை கண்டு பிடித்து விடுவான்.. நீ வர வேண்டாம்.. எனத் தடுத்து விடுகிறார் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்
மூலவர்: ஞானபுரீஸ்வரர், உற்சவர்: சந்திரசேகர், அம்பாள்: கோவர்த்தனாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஞானபுரீஸ்வரர். சுயம்புவாக தோன்றியவர்.
சதுர பீட ஆவுடையாருடன் பச்சைக்கல் மரகதத்தால் உருவான அழகிய திருமேனி. ஒளி வீசும் தேஜோமய லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. இடைச்சுர நாதர் என்ற திருநாமமும் உண்டு.
கற்பூர தீபாராதனையின்போது, கற்பூர ஜோதி துல்லியமாக லிங்கத் திருமேனியில் தெரிகின்றது. தேன் அபிஷேகம் செய்தால் மரகத லிங்கத்தை துல்லியமாக தரிசிக்கலாம்.
தோடணி குழையினர், கழல் மல்கு காவினர், கனல் மழுவாளர், விடம் அணி மிடற்றினர் என்றெல்லாம் ஞானசம்பந்தர் வர்ணித்த உற்சவ மூர்த்தியின் எழில் தோற்றம் கண்களையும் மனதையும் விட்டு அகலாதது.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் கோவர்த்தனாம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தனது இடது காலை முன்னால் வைத்தும், வலது காலை பின்னால் வைத்தும், நடக்க தயாராகும் நிலையில் காட்சி தருகின்றாள். இமய மடக்கொடி என்ற திருநாமமும் உண்டு.
முகப்பு வாசல் வழி உள் சென்றதும் நாம் காணும் வரசித்தி விநாயகரிடம் ஆசி பெற்று, எதிர் சந்நிதியில் வலம்புரி விநாயகரை தரிசித்து பிரகார வலம் தொடர்கிறோம்.
வலச்சுற்றில் பிரம்மாண்டேஸ்வரர் மற்றும் பிரம்மாண்டேஸ்வரி ஆகியோரின் அழகு திருவுருவங்களை சேவிக்கலாம். தெற்கு நோக்கி மயில் மீதமர்ந்த முருகப் பெருமான். துவார கணபதி, முத்துக்குமாரஸ்வாமி, நால்வர், கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
தட்சிணாமூர்த்தியின் முயலகன் இடது பக்கமாக திரும்பியுள்ளது வித்தியாசமானது. விநாயகர் வடிவில் காணப்படும் பாம்புக்குழி வித்தியாசமானது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.