அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (தேவகோட்டை)

God Name : மூலவர்: ஸ்ரீ சுந்தரேஸ்வரர், உற்சவர்: சேக்கிழார்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

சண்டாசுரன் எனும் அரக்கன் ஜனங்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தான். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பார்வதி தேவியை சரண் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற பூலோகம் வந்த தேவி, கோட்டை ஒன்றை அமைத்துக் கொண்டு, அதில் இருந்து கொண்டு அரக்கனுடன் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தாள். தேவி கோட்டை என்பதே மருவி தேவகோட்டை ஆயிற்று. நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்ட கோவில். சேக்கிழார் கோவில் என்றே அழைக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சுந்தரேஸ்வரர். ஒளி வீசும் தேஜோமய லிங்கம். நாகாபரணம், மணி மாலைகள், திருவாசி ஆகியன மேலும் அழகு சேர்க்கின்றன. உற்சவராக சேக்கிழார் பெருமான் தரிசனம் தருகிறார். ஸ்வாமிக்கு வலப்பக்கமாக சந்நிதி கொண்டிருக்கும் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதி. சாந்தமே உருவாக வடிவமைந்த ஸ்ரீ மீனாட்சியின் திருவுருவம் மனதை விட்டு அகலாதது. உச்சிக்குடுமியுடன் உள்ள தண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கின்றார். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.