அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் (கண்டதேவி)

God Name : சொர்ணமூர்த்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

ராவணனின் புஷ்பக விமானத்தை வழிமறித்து, சீதையை மீட்கப் போராடிய ஜடாயுவின் சிறகுகளை ராவணன் வெட்டி வீழ்த்தி துன்புறுத்தினான். வெட்டப்பட்ட சிறகுகள் வீழ்ந்த இடமான இறகுசேரி அருகாமையில் உள்ளது. சீதையைத் தேடி வர ஹனுமனை அனுப்பிய ராமன், இத்தலத்தில் தங்கி சொர்ணமூர்த்தீஸ்வரரை வழிபட்டார். திரும்ப வந்த ஹனுமன், "கண்டேன் தேவியை" (சீதையை) என்று கூறிய இடம் என்பதால், இவ்வூர் கண்டதேவி எனப் பெயர் பெற்றது. அசுரனை சம்ஹரிக்க வந்த தேவியை, தேவர்கள் கண்ட ஸ்தலம் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். ஜடாயு வழிபட்டதால் சிறகிலிநாதர் எனப்படுகிறார். ராமபிரான் ஜடாயுவிற்கு பித்ருகடன் செய்த ஸ்தலம் என்பதால், இது நீத்தார்கடன் நிறைவேற்றும் ஸ்தலமாக விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சொர்ணமூர்த்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஆதியில் சிறகிலிநாதர் என்ற பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஸ்வர்ணாபரணேஸ்வரர் (ஸ்வர்ணா - தங்கம், பரணா - இறக்கை) என்ற பெயர் வந்து, தற்போது சொர்ணமூர்த்தீஸ்வரர் என்று அழைக்கின்றனர். அம்பாள் பெரியநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். மேற்கு பிரகாரத்தில் ஜடாயு நினைவாக ஸ்தூல லிங்க பீடத்தில் ஸ்ரீ திருவடியும் நாவல் மரமும் உள்ளன. மண்டபத்து விதானத்தில் ராசி சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தூணும் அதில் காணப்படும் சிற்பங்களும் வியக்கத்தக்கவை. சுற்றுச்சுவரில் கருப்பரின் திருவுருவம் காணப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.