அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக் கோவில் (இலுப்பைக்குடி)
God Name : தான்தோன்றீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலவர்: தான்தோன்றீஸ்வரர், அம்பாள்: வடிவுடையம்மன்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தான்தோன்றீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். அம்பாள் வடிவுடையம்மன் எனப்படும் சௌந்தரநாயகி, பிரம்ம கௌரியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
வடுகநாதர் எனப்படும் பைரவர் சந்நிதி, சாந்நித்யம் மிகுந்தது. ஸ்வர்ணாகர்ஷண பைரவராக தரிசனம் தருகிறார். இடது கையில் அட்சய பாத்திரம் வைத்துள்ளார். இரட்டை நாய் வாகனங்கள்.
பைரவரின் சிரம் திருப்பத்தூரிலும், ஹ்ருதயம் வைரவன்பட்டியிலும், பாதம் இலுப்பைக்குடியிலும் இருப்பதாக ஐதீகம்.
30 வெண்கலச் சிலைகளும் ஏராளமான சுவர் ஓவியங்களும் உள்ளன. தட்சிணாமூர்த்தி மண்டபத்தில் கம்பீரமாக உள்ள சிங்கம் சிற்பம் மிகவும் வேலைப்பாடுகளையுடையது. கல் பந்துக்கள் வாய்க்குள் உருளும் - விரலால் சுற்ற முடியும், ஆனால் வெளியே எடுக்க முடியாது. தூணில் காணப்படும் ஒரு அங்குல உயர விநாயகரின் திருவுருவம் அற்புதமானது. கண் இமை, கை விரல் நகங்கள் ஆகியவற்றை துல்லியமாக செதுக்கியுள்ளனர்.
கோபுரத்தின் பல்வேறு நிலைகளில் 109 சுட்ட செம்மண் சிற்பங்களைக் காணலாம். கொங்கண சித்தர் வழிபட்ட ஸ்தலம்.
இலுப்பை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இலுப்பைக்குடி எனப் பெயர் கொண்டது.
2700 புள்ளிகளுடன் 31 கிராமங்களைச் சேர்ந்தவர்களால் பராமரிக்கப்படும் கோவில்.
ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.