அருள்மிகு சோலை வளர்த்த அய்யனார் திருக்கோவில் (பள்ளத்தூர்)
God Name : சோலை ஆண்டவர் எனப்படும் சோலை வளர்த்த அய்யனார்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சோலை ஆண்டவர் எனப்படும் சோலை வளர்த்த அய்யனார் எழுந்தருளி அருள் புரிகின்றார். வலப்புறக் காது துளைக்காததாகவும், இடப்புறக் காது தோடு அணிந்ததாகவும் காணப்படுகிறது. வலது காலைத் தொங்க விட்டுள்ள நிலை தவிர மற்ற அனைத்திலும் அய்யப்பன் போலவே காட்சி தருகின்றார். பரிவாரத் தேவதைகளாக பதினெட்டாம்படி கருப்பர், சன்னாசி, களிக்காரி, தட்சிணாமூர்த்தி, பெரிய கருப்பர், சின்னக் கருப்பர், பட்டவர், அகோர வீரபத்ரர், பிரம்ம ஸ்வாமிகள், சித்திர விநாயகர், முனீஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், சப்த கன்னியர்கள் ஆகியோர் மூலவரைச் சுற்றி எழுந்தருளியுள்ளனர். லிங்க வடிவில் காட்சி தரும் காளியம்மனும், அடைக்கலம் புகுந்த சாத்தப்பையாவும், வழி விடும் கஜேந்திரரும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். சக்தி மரம், வில்வ மேடை, பலி பீடம் காணலாம். கோவிலுக்கு வெளியே காணப்படும் பிரம்மாண்டமான குதிரை, பூதம் மற்றும் காவல் தெய்வங்களின் வண்ண சிலைகள் மிகவும் அழகானவை. குதிரை சிலைகள் அணி வகுத்து நிற்பது கண் கொள்ளா காட்சி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.