அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில் (கோவிலூர்)
God Name : கொற்றவாளீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
காளையார் கோவில் பகுதியை ஆண்ட வீரபாண்டியன் எனும் அரசன், காளீசரின் அருளால் ராட்சஸகட்கம் எனும் வாளைப் பெற்றிருந்தான். ஒரு நாள் அரசன் வேட்டையாடச் சென்றபோது, ஒரு மானைப் பின்தொடர்ந்து செல்கையில், தனது பரிவாரங்களிலிருந்து விடுபட்டு தனியாளானான். தனது வாள் எங்கோ விழுந்தது கூடத் தெரியாமல் தொடர்ந்தான்.
மான் தப்பிச் சென்றுவிட்டதை உணர்ந்து, பின்தொடர்வதை விடுத்து, அங்குள்ள மது புஷ்கரிணியில் நீராடி, பின்னர் அங்குள்ள மரத்தடியில் படுத்து உறங்கினான். உறக்கம் கலையும்படி ஒரு பெரிய சப்தம் கேட்கவே, விழித்தெழுந்து பார்த்ததில், ஒரு தவசி மீது வேங்கை ஒன்று பாய்வதைக் கண்டான். வாளை இழந்துவிட்டதை உணர்ந்தபோதிலும், நிராயுதபாணியான அவன் தன்னுயிரையும் பொருட்படுத்தாது புலி மீது பாய்ந்து தவசியைக் காப்பாற்ற முற்பட்டான்.
புலியும் தவசியும் திடீரென மறைந்தனர். இது அரனாரின் திருவிளையாடல் எனப் புரிந்துகொண்ட அரசன் வாளைத் தேட முற்பட்டான். வன்னி மரத்தடியில் ஒரு அழகிய லிங்கமும் அதனருகே தனது வாளும் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தைப் பூஜித்து கோவில் ஒன்றையும் எழுப்பினான். கொற்றவன் என்றால் அரசன் - கொற்றவனின் வாள் திரும்பத் தந்த இறைவன் என்பதால்கொற்றவாளீஸ்வரர் எனும் பெயர் கொண்டார்.
மூவருக்கும் முதல்வனான பரம்பொருளைத் தேடி மதுப்ரியர் எனும் முனிவர் கடுந்தவம் மேற்கொண்டார். அவருக்கு திரிபுவனேஸ்வரராகக் காட்சி தந்தார் இறைவன். ஜைமினி முனிவர் இவ்விறைவனை வழிபட்டு கார்யசித்தி அடைந்தார்.
இத்தலத்தின் ஸ்தல புராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப் பெற்றது.
மூலவர்: கொற்றவாளீஸ்வரர், அம்பாள்: நெல்லை நாயகி.
கோவிலின் வட பகுதியில் மூலவர் சந்நிதியும், தென் பகுதியில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. மூலஸ்தானத்தில் மூலவராக கொற்றவாளீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு சிவலிங்க வடிவம். இவருடைய மற்றொரு திருநாமம் ராஜ கட்க பரமேஸ்வரர் என்பதாகும்.
அன்னை நெல்லை நாயகி அருளாட்சி புரிகிறாள்.
ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கிடையில் உள்ள சந்நிதிகளில் நித்ய கல்யாணி அம்மன் உடனாய கைலாஸநாதர் மற்றும் விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
உற்சவ விக்ரஹங்களுள் சிவகாமி சஹித நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகிய விக்ரஹங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
வலச்சுற்றில் வன்னி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், பைரவர், சனீஸ்வரர், சூரிய - சந்திரர்கள், நவகிரகங்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்து தூண்களில் அரிய பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் கங்காளநாதர், வீரபத்ரர், ஊர்த்துவதாண்டவர், ரிஷபாரூடர், சரஸ்வதி, சாரதாம்பாள் ஆகியோரின் திருவுருவங்களும் மீனாட்சி கல்யாணக் காட்சிகளும் சிறந்த வேலைப்பாடுகளுடையவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.