அருள்மிகு கொப்புடை நாயகியம்மன் திருக்கோவில் (காரைக்குடி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
கொப்பு எனும் காதணியை அணிந்தவள் என்பதால் கொப்புடை நாயகி எனும் பெயர் பெற்றாள் என்பர். உற்சவரே மூலவராக தரிசனம் தருவது இத்தலத்தின் விசேஷமாகும்.
இவ்வூருக்கு அருகேயுள்ள சங்கராபுரத்திலுள்ள காவல் தெய்வமான காட்டம்மனின் சகோதரியே இந்த கொப்புடையாள். சகோதரியின் குழந்தைகளிடத்து அளவற்ற அன்பை வைத்திருந்தாள் கொப்புடையாள் என்றும், இதனால் தன்னிடத்து குழந்தைகள் பாசமில்லாது போய்விடுமோ என்ற பயத்தில் காட்டம்மன் கொப்புடையாளை குழந்தைகளிடமிருந்து பிரித்தாள் என்றும், அந்த ஏக்கத்தில் இவள் தனிமையானாள் என்றும் செவிவழி கதை ஒன்று நிலவுகிறது.
சங்கராபுரத்தை ஆண்ட சிற்றரசன் காட்டம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டவன். அந்நியர் படையெடுத்த சமயத்தில் காட்டம்மனை ஒரு வேப்ப மர பொந்தில் ஒளித்து வைத்திருந்து, பின்னர் நம்பகமான ஒருவரிடம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டினான் என்றும், இப்படி ஒப்படைத்ததால் ஒப்புடைநாயகி எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி கொப்புடைநாயகி என்றானதாகவும் கூறப்படுவதுண்டு.
ஆதியில் இப்பகுதி முழுவதும் காரைச் செடிகள் மிகுந்து காடு போல் இருந்ததாகவும், அவற்றை அழித்து நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்பதால் காரைக்குடி எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் கொப்புடை நாயகி அக்னி ஜ்வாலா கிரீடமணிந்து ஸ்ரீ சக்கர பிரதிஷ்டையான வெள்ளி பீடம் மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வெள்ளி திருவாசியும் ஆபரணங்களும் மேலும் அழகு சேர்க்கின்றன. சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய பஞ்சலோக திருமேனி. சாந்தமே உருவாக இருக்கும் இவள் மிகுந்த வரப்பிரசாதி. கிழக்கு பார்த்த சந்நிதி.
மூலஸ்தானத்தை ஒட்டியுள்ள சோபன மண்டபத்தின் இடதுபுறமாக வல்லத்து கருப்பர், விநாயகர் மற்றும் வலது புறமாக தண்டாயுதபாணி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அன்னைக்கு பூச்சொரிதல் நடைபெறுவது இந்த மண்டபத்தில்தான்.
வலச்சுற்றில் கன்னி மூல கணபதி, சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் மற்றும் விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.