அருள்மிகு ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம் (இளையாத்தங்குடி)
God Name : ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
திருவிடைமருதூரைச் சேர்ந்த சேஷாத்ரி சாஸ்திரிகளின் குமாரன் மகாலிங்கம் குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். காஞ்சி சங்கர மடத்தின் 64வது பீடாதிபதியானவர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகளை செய்தார். அதன் வைதீக காரியங்களை கவனிக்க மகாலிங்கத்தை அனுப்பினார்.
பல பண்டிதர்கள் கலந்து கொண்ட பெரிய நிகழ்வில் ஒரு இளைஞன் சாதுர்யமாக காரியங்களை சிரமேற் கொண்டு முடித்ததில் மகிழ்ச்சியுற்ற பீடாதிபதி, தனக்குப் பிறகு பீடாதிபதியாக தகுதியானவன் இவன் என முடிவெடுத்தார்.
65வது பீடாதிபதியாக பொறுப்பேற்ற மகாலிங்கம் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எனும் தீட்சா நாமத்துடன் காஞ்சி மடத்தின் புகழைப் பரப்பினார். பின்னர் க்ஷேத்ராடனம் புறப்பட்ட ஸ்வாமிகள் இவ்வூர் வந்து சேர்ந்தார். நித்ய கல்யாணி - கைலாஸநாதரை தினமும் தரிசிக்க ஏதுவாக நகரத்தார்கள், ஸ்வாமிக்கு தங்க இடமும், சிவபூஜைக்கு ஏற்பாடும் செய்து தந்தனர்.
நகரத்தாருக்கு சொந்தமான ஒரு குறிப்பிட்ட இடத்தை (முட்செடி புதர்களைக் கொண்டது) தனக்கு வேண்டுமென கேட்டார். ஸ்வாமி தனது இறுதி நாட்களில் இருப்பதை அவர்கள் அறியவில்லை. அன்றிலிருந்து மூன்றாம் நாள் (20.3.1890) ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். அவர் குறிப்பிட்டு கேட்ட இடத்தையே அவரது அதிஷ்டானமாக உருவாக்கியுள்ளனர்.
காஞ்சி சங்கர மடத்தின் 65வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளது பூத உடலை (1851 - 1890) நிர்விகல்ப சமாதியில் வைத்து அதன் மேல் லிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்துள்ளனர். லிங்கம் சாளக்ராமத்தினால் ஆனது.
மஹா மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ சுப்ரமண்யர் எழுந்தருளியுள்ளனர். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ ஆதி சங்கரரை தரிசிக்கலாம். பிரதோஷ தினங்களில் நந்திக்கும், சதுர்த்தசியில் பிள்ளையாருக்கும், ஏகாதேசி - துவாதசி தினங்களில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன.
மடி ஆசாரம் காரணமாக நைவேத்ய பண்டங்களை குமுட்டி அடுப்பில் செய்கின்றனர். கைலி, சட்டை, பனியன் உடுத்திக் கொண்டு உள்ளே போக அனுமதியில்லை. வேத பாடசாலையில் 15 மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் கற்கின்றனர்.
ஸ்வாமிகள் இளைப்பு ஆறும் குடி என்பதே இளையாத்தங்குடி என்றானது. இந்த அதிஷ்டானம் கைலாஸநாதர் கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்தது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.