அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (இளையாத்தங்குடி)
God Name : ஸ்ரீ கைலாசநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
 ்
 ்
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ நித்ய கல்யாணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். கம்பீரமாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும் திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் ஸ்ரீ நித்ய கல்யாணி தனி சந்நிதி கொண்டுள்ளார். மிகுந்த வரப்பிரசாதி என்பர். சந்நிதிக்கு முன்பாக உள்ள கல் சங்கிலிகள் அழகாக உள்ளன.
இங்குள்ள நர்த்தன விநாயகரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகான திருவுருவம்.
முருகப் பெருமான், பைரவ மூர்த்தி மற்றும் வடக்கு நோக்கியுள்ள கூத்தபிரான் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். மகா மண்டபம் மற்றும் அர்த்தமண்டபம் யாவும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
சிவனுக்குரிய ஸ்தலங்களுள் சிறப்பான ஸ்தலமென்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அசுரர்களிடமிருந்து இந்திராதி தேவர்களைக் காக்க பைரவரையும் முருகப் பெருமானையும் இறைவன் அனுப்பினார். இந்தக் காட்சி வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.
800 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். மிக அழகான ஊருணியும் அதனருகே விநாயகரும் தரிசிக்க சந்தோஷம் தருகின்றன.
பைரவ தீர்த்த நீரூற்று பிரசித்தமானது. 'இளைப்பு - ஆற்று - குடி' என்பதே 'இளையாத்தங்குடி' என்றானது.
இது ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.