அருள்மிகு கருப்பர் திருக்கோவில் (ஆலத்துப்பட்டி)
God Name : கருப்பர் மற்றும் சன்னாசி சாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
பிரதான கருவறையின் மத்தியில் சன்னாசி சாமியின் சிலை உள்ளது. மலுக்கன், சந்தனக் கருப்பர், தொட்டியான், கட்டு சோற்றுக் கருப்பர், வேடர், செங்கிடாய் கருப்பர், மேலக் கருப்பர் ஆகிய கிராம தேவதைகள் இரண்டு புறங்களிலும் காணப்படுகின்றனர். கம்பீரமாய் நிற்கும் உளி வீரன் தெற்கு நோக்கியும், இருவனசாமி மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
சிவராத்திரியன்று இரவு 1 மணிக்கு போடும் படையல் விழாவில், ஊற வைத்த பச்சரிசி, வேக வைத்த பயறு ஆகியவற்றை வைக்கின்றனர். இடித்த பச்சரிசி மாவில் பள்ளையம் செய்து, பரங்கிக்காய் சமைத்து பொங்கலிட்டு, இவற்றை கட்டி சாமியாடிக்கு வழங்கி சாமி அழைக்கின்றனர். அப்போது அவர் மீது வந்திறங்கும் கட்டு சோற்று கருப்பர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்.
இங்குள்ள ஆண்பனைமரத்திடம் திருவுளம் கேட்பார்கள். அங்கிருந்து கௌலி (பல்லி) சப்தமிட்டால் சம்மதம் என எடுத்துக்கொள்வார்கள்.
அருகேயுள்ள கீழசேவல்பட்டி கிராமத்திலுள்ள சிவாலயத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.