அருள்மிகு ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் திருக்கோவில் (நேமம்)

God Name : ஜெயங்கொண்ட சோழீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

இவ்வூரிலுள்ள வனப்பான சோலையைக் கண்டு சந்தோஷம் கொண்ட அகஸ்திய முனிவர், சிவலிங்கம் ஒன்றை இங்கு நிறுவி, தேனபிஷேகம் செய்து பூஜித்து வழிபட்டார். திரிபுராதிகளை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானுக்கு இங்கு கோவில் ஒன்றை எழுப்புமாறு விநாயகர் கேட்டுக்கொண்டதின் பேரில் அகஸ்தியர் இந்தக் கோவிலை அமைத்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. கி.பி. 985 - 1018ல் ஜெயங்கொண்ட சோழபுரம் என்றும், குலசேகர பாண்டியன் காலத்தில் குலசேகர பாண்டியபுரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், விதிமுறைகளின்படி சரியாக நடப்பதால் நியமம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி நேமம் என்றானதாக கூறப்படுகிறது. ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.
மூலவர்: ஜெயங்கொண்ட சோழீஸ்வரர்் அம்பாள்: சௌந்தர நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வட்டமான வடிவம் கொண்ட ஆவுடையார் மீது அழகிய பாணம் அமர்ந்துள்ளது. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் சௌந்தர நாயகி எனப்படும் அழகம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மஹாமண்டபத்துள் பிள்ளையார், முருகன், கஜலட்சுமி, ரிஷபாரூடர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். உருவமாக இல்லாமல் அரூபமாக காளி எழுந்தருளியுள்ளார். பீடம், சூலம், வேல், வாள் ஆகியனவற்றை வைத்து வணங்குகின்றனர். காளி தேவிக்கு உக்ரம் அதிகம் என்பதால், அந்த உக்ரத்தைத் தணிக்க ஸ்ரீ பைரவரை எதிரில் ஸ்தாபித்துள்ளனர். காவல் தெய்வமான இக்காளிக்கு, சிவராத்திரியன்று நவதான்யங்களை வேகவைத்து படைத்து வழிபடுகின்றனர். இதனை பச்சிலை பரப்புதல் என்பர். இங்கு எழுந்தருளியுள்ள கால சம்ஹார மூர்த்தி கொள்ளை அழகுடன் காணப்படுகின்றார். திருச்சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்கள் சிற்ப வேலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவை. மரப்பலகைகளை செதுக்கி அடுக்கியது போன்ற மேல் விதானக் கூரை, ஆவுடையார் கோவில் கொடுங்கையை நினைவுபடுத்துகிறது. விதானத்தில் சிவபுராண நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர். ராசி சக்கரம் வரையப்பட்டுள்ளது. விநாயகர் ஆவுடையில் இருப்பது வித்தியாசமான அழகு. இக்கோவிலின் விமானம் புகழ் பெற்றது. சிவன்-பார்வதியை கிழக்கிலும், விஷ்ணு - முருகன் மற்றும் தட்சிணாமூர்த்தியை தெற்கேயும், ராம - லக்ஷ்மண - சீதை மற்றும் கிருஷ்ணனை மேற்கேயும், பிரம்மாவை வடக்கேயுமாக வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.