அருள்மிகு ஷண்முகநாதர் திருக்கோவில் (குன்றக்குடி)

God Name : ஷண்முகநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

தான் கொண்ட ராஜபிளவை கட்டி நோயிலிருந்து விடுபட வேண்டி, பெரியமருது இவ்விறைவனை வழிபட்டான் எனவும், நோய் நீங்கப் பெற்றதும் இவ்வாலயத்தை ஸ்தாபித்தான் எனவும் குறிப்பொன்று கூறுகிறது.
மலையடிவாரத்திலுள்ள தோகையடி ஆலயம் சென்று அங்குள்ள தோகையடி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று மலையேறத் தொடங்குவார்கள். தோகையடியில் நின்று நிமிர்ந்துப் பார்த்தால் ஆறுமுகனின் அழகிய சுதை வடிவம் காணலாம். மயில் படுத்து அடை காப்பது போன்ற தோற்றத்தில் காணப்படும் மலை - வடக்கே முகமும் தெற்கே தோகையும் கொண்டு மயிலின் வடிவம் கொண்டுள்ளது. 149 படிக்கட்டுக்கள் ஏற வேண்டும். படிகள் மயிலின் தோகையைப் போன்று இருக்கும். ஒரு கல் சுற்றளவுள்ள மலையை கிரிவலம் வருகின்றனர். படிகளை ஏறும்போது வழியில் கார்த்திகை விநாயகர், இடும்பன், வல்லப கணபதி, வீரபாகு, நால்வர் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள ஷண்முகநாதர் மிகுந்த வரப்பிரசாதி. ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்கள் கொண்ட அழகிய திருமேனியுடன் மயில் வாகனத்தில் வீற்றிருக்கின்றார். மூலவர் மயிலிலிருந்து இறங்கி வருவது போன்றே காட்சியளிக்கின்றார். மயில் வாகனம், திருவாசி, முருகனின் திருவுருவம் அனைத்தும் ஒரே சிலையாக - மயிலின் இரு கால்களில் தாங்கி நிற்பது அதிசயமான காட்சி. இடப்பக்கம் தெய்வயானை, வலப்பக்கம் வள்ளி என இரு தேவியர்களும் தனித்தனி மயில்களில் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். திருச்சுற்றில் சொர்ண கணபதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், குழந்தை வடிவேலன், பைரவர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். திரும்பும் வழியில் விசாலாட்சியுடனாய காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம். மாமண்டபத் தூண்களில் சின்ன மருது - பெரிய மருது சிலைகளைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.