அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் (பிள்ளையார்பட்டி)

God Name : தேசி விநாயகப் பிள்ளையார் எனப்படும் கற்பக விநாயகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோவில் இது. குகையைக் குடைந்து, குடையும்போதே விநாயகர் வடிவத்தை அமைத்து அழகான புடைப்புச் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். மூலஸ்தானத்தில் மூலவரான கற்பக விநாயகர் வடக்கு நோக்கி அர்த்த பத்மாசனமாக வீற்றிருக்கின்றார். கால்கள் இரண்டும் மடிந்த நிலையில் இருக்குமாறு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆறடி உயரம் கொண்ட அழகான திருமேனி. வலது தந்தம் நீண்டும், இடது தந்தம் குறுகியும், வலம் சுழித்த துதிக்கையுடனும் காட்சி தருகின்றார். காதுகள் விடைத்து, கண்கள் மிளிர தேஜோமயமாக தரிசனம் தருகின்றார். பாசாங்குசம் இல்லாத இரண்டே திருக்கரங்கள். இடக்கரத்தைக் கடி ஹஸ்தமாக இடையில் வைத்து, வலக்கரத்தில் மோதகம் தாங்கி காட்சி தருகின்றார். தேசி விநாயகப் பிள்ளையார் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. ஒடிந்த வலப்புற தந்தத்தில் தொடங்கி, அங்கிருந்து மேல் நோக்கி வலஞ் சுழித்து, இடக்காது வரை சென்று, வளைந்த இடத் தந்தத்தின் வழியாக கீழ் நோக்கி துதிக்கை நுனி வரை கோடிட்டால் 'ஓ' எனும் எழுத்து கிடைக்கும். கையிலுள்ள மோதகத்தைக் கோடிட்டால் 'ம்' என்ற எழுத்து கிடைக்கும். ஓம்கார ஒலிக்குரிய வரி வடிவமான 'ஓம்' எனும் வடிவைப் பெற்றிருக்கின்றார் கற்பக விநாயகர். 'தேசி விநாயகர்' என்றொரு பெயரும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியில் மருதீசர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். செஞ்சடேஸ்வரர், திருவீசர், திருவேங்கைக்குடி மஹாதேவர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் சிவகாமி என்கிற வாடாமலர் மங்கை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சப்த மாதர்கள் மற்றும் காத்யாயினியை தரிசிக்கலாம். செவ்வாய் தோஷம் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர். விபூதிக் காப்பு, சந்தனக் காப்பு போன்ற அலங்காரங்களில் ஒளிர் விடும் விநாயகர். வெள்ளி மற்றும் தங்க கவசங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன. உரத்த குரலில் வேதகோஷங்கள் கூறி பூஜை செய்கின்றனர். இது ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.