அருள்மிகு வைரவன் திருக்கோவில், வைரவன்பட்டி
God Name : மூலவர்: வளர் ஒளிநாதர்் சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ பைரவர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்கள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர்.
அசுரர்களுக்கு பயந்து இத்தலத்தில் ஒளிந்துக் கொண்டிருந்த தேவர்களை கண்டுபிடித்து இம்சை செய்தனர். இதைக்
கண்டு அஞ்சிய தேவர்கள் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனையும், இறைவியையும் துதித்து சரணடைந்தனர்.
சிவபெருமான் தன்னிலிருந்து ஒரு குமாரனை தோற்றுவித்தார். பைரவர் கோலத்தில் நின்ற அந்த குமரன் கணபதியையும்,
நந்தியையும் அழைத்துக்கொண்டு போய் போரிட்டு அசுரர்களை அழித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் சிவபெருமான் இங்கு ஜோதி வடிவாக காட்சி தந்ததால் வளர் ஒளிநாதர் என்ற பெயரைக்
கொண்டார். கார்த்திகை மாதம் சம்ஹார சஷ்டி கொண்டாடுகின்றனர். பைரவர் சூலாயுதம் கொண்டு உருவாக்கிய தீர்த்தம்
வைரவன் தீர்த்தம் எனப்படுகிறது.
தினமும் காலை வேளைகளில் பைரவருக்கு விசேஷ ஹோமங்கள் நடைபெறுகின்றன. ராகு கால ஹோமம் (4.30 - 6.00) நடக்கிறது.
இது ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்றாகும்.
மூலவர்: வளர் ஒளிநாதர்் அம்பாள்: வடிவுடையம்மை.
வளர் ஒளி விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று வலச்சுற்றை தொடங்கலாம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் வளர் ஒளிநாதர். தேஜோ மய லிங்கம்.
கம்பீரமான தோற்றம். அன்னை வடிவுடையம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
அன்னை சந்நிதியின் பின்புறமாக இரண்டு பல்லிகளின் சிற்பங்கள் காணலாம். தோஷங்களை நீக்க வல்ல பல்லிகள் எனக் கூறப்படுகிறது.
சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையில் ஸ்ரீ பைரவர் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே. பத்ம பீடத்தில்
நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார் ஸ்ரீ பைரவர். முன் கரங்களில் சூலமும் கபாலமும் கொண்டுள்ளார்.
பின் கரங்களில் டமருகமும் நாகமும் ஏந்தியுள்ளார். உயர்ந்த கற்களால் இழைத்த தங்க கவசம் அணிவிக்கின்றனர்.
சந்தன காப்பில் ஜொலிப்பார். பின்னணியில் வாகனமான நாய் காணப்படுகிறது. ராஜ மார்த்தாண்ட பைரவர் எனப்
போற்றுவர். முன்பாக உள்ள பீடத்தில் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளன.
விஸ்வரூப ஆஞ்சநேயர், கஜலட்சுமி, வாகை சூடிய குதிரை வீரன் ஆகியோரின் திருவுருவங்களின் உருவாக்கம்
பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. ஒரே கல்லில் குடைந்துள்ள சண்டிகேஸ்வரரின் குடைவரை சந்நிதியும் மற்ற சிற்பங்களும்
கண்களுக்கு விருந்தை அளிக்கின்றன. சண்டீஸ்வரரை உருவாக்க கல் எடுக்கப்பட்ட பள்ளம் சண்டீஸ்வர மலைப்பள்ளம்
எனப்படுகிறது. ஏழிசை மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.