அருள்மிகு பறை நாச்சியார் திருக் கோவில் (பட்டமங்கலம் - கருங்குளம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
பிரதான கருவறையில் பறை நாச்சியார் கம்பீரமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அன்னக் கிண்ணமும், ஆயுதங்களும் வைத்துள்ள எட்டு திருக் கரங்கள் கொண்ட அழகான திருமேனி. வேண்டிய வரங்களை நல்கும் வரப்ரசாதி. எதிரே எலுமிச்சம்பழம் குத்தப்பட்ட மூன்று சூலங்கள் உள்ளன.
பெரிய கருப்பு, சின்ன கருப்பு, நொண்டி, சப்பாணி போன்ற காவல் பூதங்களையும், பண்டாரம், சந்யாசி, பாம்பாட்டி, பேச்சி, ராக்காயி, வீரபத்ரர், ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தேவதைகளையும் கோவிலின் வெளியே திறந்த வெளியில் காணலாம்.
வட்ட வடிவமாக உருவாக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட சுற்று சுவர்கள், காய்ந்த செடி மற்றும் விளாரிமார் தழைகள் கொண்டு வேயப்பட்ட கூரை, குகை போன்ற அமைப்பில் சிறிய நுழைவாயில் ஆகியவற்றுடன் கூடிய கோவில். நூற்றுக்கணக்கான மண் பொம்மைகளை நேர்த்திக் கடனாக கொண்டு வந்து வைக்கின்றனர்.
அன்னையின் சிலையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி புதியதாக செய்து வைக்கின்றனர். பங்குனி திருவிழா சமயத்தில் கோவிலையே புதியதாக மாற்றி, காவல் பூதங்கள் புடை சூழ புதிய பிம்பத்தை, தாரை - தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்வார்களாம்.
கோவிலிலுள்ள உரல் - உலக்கை கொண்டு நிவேதனப் பண்டம் தயார் செய்வார்களாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.